குடியேற்றவாசிகளை கட்டுப்படுத்த அவுஸ்ரேலியா எடுத்த முடிவு! ஜனவரி முதல் புதிய திட்டம்
அடுத்த வருடம் குடியேற்றவாசிகளை கட்டுப்படுத்துவதற்கான புதிய திட்டத்தினை அறிமுகப்படுத்தவுள்ளதாக அவுஸ்ரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக மேலும் அவர் அறியத்தருகையில்,
“வெளிநாடுகளில் இருந்து தேவையற்ற கற்கைநெறிகளை கற்பதற்காக அவுஸ்திரேலியா வரும் மாணவர்கள் அவுஸ்ரேலியாவின் கல்வியமைப்பினை துஸ்பிரயோகம் செய்கின்றனர்.
புலம்பெயர் கட்டமைப்புக்களை உடைப்பதுதான் ‘ஒப்பரேஷன் துவாரகாவின் நோக்கம். பொட்டமான் அதனைச் செய்வார் என்றும் கூறப்பட்டது (video)
தேசிய நலன்களிற்கும் உதவாத கற்கை நெறிகள்
தங்களின் திறமைகளை வளர்த்துக்கொள்வதற்கும் அவுஸ்ரேலியாவின் தேசிய நலன்களிற்கும் உதவாத கற்கை நெறிகளிற்காக வெளிநாட்டு மாணவர்கள் அவுஸ்ரேலியா வருகின்றனர்.
இது எங்களின் தேசிய நலன்களிற்கும் அவர்களின் நலன்களிற்கும் நன்மையளிக்காத விடயம் இதனால் இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.” என்றார்.
இதேவேளை இந்த வாரம் குடியேற்றவாசிகளை கட்டுப்படுத்துவதற்கான புதிய திட்டங்கள் குறித்த விபரங்கள் வெளிவரலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |