அவுஸ்திரேலியாவில் இலங்கை வம்சாவளி பெண்ணுக்கு மூன்றாவது முறையாக அடித்த அதிஷ்டம்
இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஷெமாரா விக்கிரமநாயக்க என்ற பெண், மூன்றாவது முறையாக அவுஸ்திரேலியாவின் அதிகூடிய சம்பளம் பெறும் பிரதம நிறைவேற்று அதிகாரியாகி சாதனை படைத்துள்ளார்.
இந்த ஆண்டு, அவர் Macquarie குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக 32.8 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் (சுமார் 70 கோடி இலங்கை ரூபாய்) வருடாந்திர சம்பளத்திற்கு தகுதியடைந்துள்ளார்.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில்
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், திருமதி ஷெமாரா விக்கிரமநாயக்கவின் சம்பளம் இந்த வருடம் 30 வீதத்தால் அதிகரித்துள்ளது.

Macquarie Group என்பது அவுஸ்திரேலியாவை தளமாகக் கொண்ட ஒரு பெரிய நிதி நிறுவனமாகும்.
பிரதம நிறைவேற்று அதிகாரியாக
2018 ஆம் ஆண்டு மெக்குவாரி குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக ஷெமாரா விக்ரமநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

திருமதி ஷெமாரா விக்கிரமநாயக்க இந்த பதவியை வகித்த முதல் பெண்மணி ஆவார்.இவர் இங்கிலாந்தில் 1962 இல் பிறந்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் | 
 
    
                                 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        