இலங்கையில் புதிய கிளர்ச்சிக்கு தயார்நிலை - திரட்டப்படும் முன்னாள் படை அதிகாரிகள்
இலங்கையில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் திட்டமிட்டபடி நடக்காமல் விட்டால் அதனை மக்கள் கிளர்ச்சிக்குரிய முக்கிய முதலீடாக மாற்றிக் கொள்ள மக்கள் விடுதலை முன்னணி( ஜே.வி.பி) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி முயற்சிக்கின்றமை தெரிகிறது.
இந்த முறை அது தனது கிளர்ச்சியில் சிறிலங்கா காவல்துறை மற்றும் இராணுவ தரப்பை பங்கேற்க வைக்கும் வகையில் நுட்பமான சில நகர்வுகளை செய்து வருவதும் புலப்படுகின்றது.
இதற்காக அது தமது தரப்பில் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளை உள்ளடக்கிய பிரிவு ஒன்றை உருவாக்கியுள்ளது.
தமது தரப்பு சிறிலங்காவின் ஆட்சியைப் பிடித்தால் தமது அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சராக கிழக்கு பிராந்தியத்திற்குரிய முன்னாள் படைத் தளபதியான ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகரவை நியமிக்கவுள்ளதாக ஜேவிபி கூறுகின்றது.
ஜேவிபி உருவாக்கிய இந்த ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளை உள்ளடக்கிய பிரிவில் முன்னாள் படை அதிகாரிகள் பலர் இணைக்கப்பட்டுள்ளனர்.
நவ கிளர்ச்சி
ஒரு காலத்தில் சிறிலங்கா காவல்துறை மற்றும் இராணுவத்தை எதிர்த்து கிளர்ச்சி செய்த அதே ஜேவிபி, இப்போது அதே படைக் கட்டமைப்பில் உள்ள முன்னாள் முகங்களை தமக்காக அதிக அளவில் இணைத்து வருவது எதிர்காலத்தில் ஜேவிபி ஆட்சியை பிடிக்கும் நோக்கத்தை கொண்டிருப்பதும், இந்த ஆட்சிப் பிடிப்பு நகர்வு நவ கிளர்ச்சி (புதிய கிளர்ச்சி) ஊடான நகர்வாக இருக்கக்கூடிய சாத்தியங்களை புலப்படுத்துகின்றது.
நாட்டின் முதற் குடிமகான அதிபர் ரணில் விக்ரமசிங்கவும் அவரது அமைச்சரவையும் நாட்டின் அரசமைப்பை மீறினால், சிறிலங்காவின் முப்படையினரும் அவர்களை கவிழ்க்க வேண்டும் என்ற அழைப்பை ஜே.வி.பி விடுத்திருக்கிறது.
இந்த அழைப்பின் பின்னணியில் தான் அது ஓய்வுபெற்ற படை அதிகாரிகளைக் கொண்ட ஒரு இராணுவ பிரிவையும் உருவாக்கியிருக்கிறது.
இதன் விரிவான பார்வையாக வருகிறது இன்றைய செய்தி வீச்சு,
தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலயம் சப்பறத் திருவிழா
