பொதுமக்கள் பாவனைக்காக அலரி மாளிக்கைக்கு அருகில் மற்றுமொரு வீதி திறப்பு
கொழும்பு (Colombo) அலரி மாளிகையை அருகில் ரொடுண்டா சுற்றுவட்டம் வரை செல்லும் வீதி திறக்கப்பட்டுள்ளது.
குறித்த வீதியானது நேற்றையதினம் (04) வீதி பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கடந்த யுத்த காலத்தில் அலரி மாளிகையின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு கொள்ளுப்பிட்டி ரொடுண்டா கார்டன் வீதி மறிக்கப்பட்டிருந்தது.
வீதி திறப்பு
சுமார் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக அவ்வாறு மூடப்பட்டிருந்த வீதி இன்று தொடக்கம் மீண்டும் பொதுமக்கள் பாதுகாப்புக்காக திறக்கப்பட்டுள்ளது.
அலரி மாளிகையின் பின்புற வழியாக பயன்படுத்தப்பட்ட ரொடுண்டா வீதி திறக்கப்பட்டதன் காரணமாக அலரி மாளிகையின் பாதுகாப்பு ஏற்பாடுகளிலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் அலரி மாளிகைக்கு வரும் வெளிவாகனங்களை இனி வரும் காலங்களில் பேரை வாவி அருகில் நிறுத்தி வைப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |