இந்திய இராணுவத்தின் 9 வீரர்கள் கொன்று குவிப்பு - புதிய பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்பு
india
jammu and kashmir
new terrorist organization
By Jaso
இந்தியாவின் மாநிலமான ஜம்மு காஷ்மீரில் 9 இந்திய வீரர்கள் கொல்லப்பட்ட நிலையில் புதிய பயங்கரவாத அமைப்பு இந்த தாக்குதலுக்குபொறுப்பேற்றுள்ளது.
PAFF பாசிசத்துக்கு எதிரான மக்கள் இயக்கம் என்று பெயரிடப்பட்ட அந்த தீவிரவாதக் குழு வெளியிட்ட 8 நிமிட வீடியோவில் ஒக்டோபர் 11 ஆம் திகதி 10 மணி நேரமாக இராணுவத்தினர் சென்ற வாகனத்தை கண்காணித்து தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீரில் முஸ்லிம் அல்லாத மேலும் பல படுகொலைகளை நிகழ்த்த உள்ளதாக அந்த இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனிடையே ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளை ஒழிக்க இராணுவத்தினர் மிகப்பெரிய அளவில் தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றனர். இராணுவத் தளபதி நரவானே பாதுகாப்பு நிலவரத்தை ஆய்வு செய்ய எல்லையின் முன்களப் பகுதிகளுக்கு விரைந்துள்ளார்.