இலங்கை தொடர்பில் ஐ.நாவிலிருந்து வெளிவந்த புதிய அறிக்கை!
People
UN
Human Rights
SriLanka
By Chanakyan
கடந்த 18 மாதங்களில் மனித உரிமை நிலைவரம் மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது எனவும் பொறுப்புக்கூறல் விடயங்களிலும் முன்னேற்றமில்லை எனவும் ஐ.நா சபையின் உண்மை, நீதி, இழப்பீடுகள் மற்றும் மீளிடம்பெறாமையை உறுதிப்படுத்தல் தொடர்பான விசேட அறிக்கையாளர் ஃபெபியன் சல்வியொலி தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையினது 48வது கூட்டத்தொடரில் இலங்கை குறித்த தமது அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உண்மை மற்றும் நீதியைத் தேடுவதற்கான நடவடிக்கைகள் போதிய அளவு முன்னெடுக்கப்படவில்லை.
இந்த விடயங்கள் நிலைமாறுகால நீதி வழங்கல் செயல் முறையையும் பாதித்துள்ளன என்றும் அவர் மேலும் தனது உரையின் போது தெரிவித்துள்ளார்.