இங்கிலாந்திலும் பரவியது ஒமிக்ரான்
இங்கிலாந்தில் இரண்டு பேருக்கு புதிய கொவிட் மாறுபாடான ஒமிக்ரான் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார செயலாளர் சஜித் ஜாவிட் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் உள்ள செம்ஸ்ஃபோர்ட் மற்றும் நொட்டிங்ஹாமில் புதிய விகாரத்தின் தொற்றுகள் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அவர்கள் இருவரும் தென்னாபிரிக்காவுக்கான பயணத்தை மேற்கொண்டதாகவும் தற்போது இருவரும் அவர்களது குடும்பங்களும் சுய தனிமைப்படுத்தலில் உள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
புதிய கொவிட் வகை பரவுவது குறித்து பிரிட்டிஷ் சுகாதார சேவை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
தென்னாபிரிக்கா, போட்ஸ்வானா, பெல்ஜியம், ஹொங்கொங் மற்றும் இஸ்ரேலிலும் புதிய ஓமிக்ரான் கொவிட் வகை பதிவாகியுள்ளது.
பிரதமர் பொறிஸ் ஜோன்சன் அரசாங்கத்தின் தலைமை அறிவியல் ஆலோசகர் சே பட்ரிக் வாலன்ஸ் மற்றும் இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அதிகாரி பேராசிரியர் கிறிஸ் விட்டி ஆகியோருடன் GMT 17:00 மணிக்கு டவுனிங் தெருவில் செய்தியாளர் சந்திப்பை நடத்துகிறார்.