இலங்கையர்களுக்கான புதிய விசா திட்டம்: தாய்லாந்து தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு
இலங்கை உள்ளிட்ட சில நாடுகளுக்கு விலக்கு அளிக்கும் புதிய விசா நடைமுறைகள் நடைமுறைக்கு வரும் திகதி விரைவில் அறிவிக்கப்படும் என இலங்கையில் உள்ள தாய்லாந்து தூதரகம் தெரிவித்துள்ளது.
“தற்போது, விண்ணப்பதாரர்கள் தாய்லாந்து விசாவிற்கு தூதரகத்தில் விண்ணப்பிக்கலாம்.
சாதாரண விசா செயல்முறை நேரம் இரண்டு வேலை நாட்கள் (திங்கட்கிழமை விண்ணப்பிக்கவும், புதன்கிழமை முடிவைப் பெறவும்)"முடியும் என்று தூதரகம் தெரிவித்துள்ளது.
புதிய விசா நடைமுறை
மேலும், தாய்லாந்து புதிய விசா நடவடிக்கைகளைத் தயாரித்து வருவதாகவும், இறுதிச் சட்ட நடைமுறைகள் முடிந்ததும் புதிய நடவடிக்கைகளின் நடைமுறைக்கு வரும் திகதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
தாய்லாந்து தூதரகம் அதன் புதிய நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, டெஸ்டினேஷன் தாய்லாந்து விசா (டிடிவி), விசா விலக்கு (60 நாட்கள்), மற்றும் விசா ஆன் அரைவல் (VoA) ஆகிய மூன்று வகையான விசாக்கள் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
கடந்த (01)ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், இலங்கை சுற்றுலாப் பயணிகள் விசா இன்றி தாய்லாந்துக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்திருந்தது.
இதன்படி, 60 நாட்களுக்கு விசா இல்லாமல் தாய்லாந்தில் தங்குவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
