குஜராத் அணியை மிரட்டிய ரின்க்கு சிங் - கொல்கத்தா அணி வெற்றி ..!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ரின்க்கு சிங்இன் அதிரடியால் கொல்கத்தா அணி 3 ஆட்டமிழப்பு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
ஐபிஎல்லில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி இடம்பெற்றது குறித்த போட்டியில், தமிழக வீரர்கள் சாய் சுதர்ஷன் மற்றும் விஜய் சங்கர் ஆகியோரின் மிரட்டலான ஆட்டத்தினால் குஜராத் அணி 204 ஓட்டங்கள் குவித்தது.
அதிரடியில் ஆடிய தமிழக வீரர் சாய் சுதர்சன், 38 பந்துகளில் 2 ஆறு ஓட்டங்கள் மற்றும் 3 நான்கு 53 ஓட்டங்கள் விளாசினார்.
5 ஆறு ஓட்டங்கள்
மற்றொரு தமிழக வீரரான விஜய் சங்கர் 24 பந்துகளில் 63 ஓட்டங்கள் குவித்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தரப்பில் சுனில் நரைன் 3 ஆட்டமிழப்புகளையும், சுயாஸ் சர்மா ஒரு ஆட்டமிழப்பையும் கைப்பற்றினர்.
????? ?????! ? ?
— IndianPremierLeague (@IPL) April 9, 2023
??? ???????? ?????! ⚡️ ⚡️
Take A Bow! ? ?
28 needed off 5 balls & he has taken @KKRiders home & how! ? ?
Those reactions say it ALL! ☺️ ?
Scorecard ▶️ https://t.co/G8bESXjTyh #TATAIPL | #GTvKKR | @rinkusingh235 pic.twitter.com/Kdq660FdER
இலக்கை நோக்கி துடுபெடுத்தாடிய கொல்கத்தா அணி ஆரம்ப முதலே வீரர்களை பறிகொடுத்தது.
எனினும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய வெங்கடேஷ் ஐயர் 40 பந்துகளில் 5 ஆறு ஓட்டங்கள் 8 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 83 ஓட்டங்களை பெற்று வெளியேறினார்.
இந்நிலையில் இறுதி ஓவரில் 28 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் அதிரடி காட்டிய ரின்க்கு சிங் 5 ஆறு ஓட்டங்களை வரிசையாக அடித்தடா கொல்கத்தா அணி 3 ஆட்டமிழப்பு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


புத்திர சோகத்தில் ஈழ அன்னையர்கள்... இன்று அன்னையர் தினம்… 11 மணி நேரம் முன்
