2022ஆம் ஆண்டில் பேராபத்தைச் சந்திக்கப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தான்!

Astrology People Hindu Zodiac Leo Insync Signs Pulse
By Chanakyan Dec 18, 2021 10:34 AM GMT
Report

கொரோனா தொற்றுக் காரணமாக 2020 ஆம் ஆண்டு முழுவதும் நாம் பெரும் சிரமத்தையும் துன்பங்களையுமே சந்தித்தோம். பின்னர் 2021 ஆம் ஆண்டில் கொரோனா பெருந்தொற்றிற்கு தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்து, தொற்றினை ஓரளவு கட்டுப்படுத்தியுள்ள நிலையில், தற்போது 2021 ஆம் ஆண்டின் முடிவில் இருக்கின்றோம். புதிய ஆண்டான 2022 ஆம் ஆண்டில் காலடியை எடுத்து வைக்க நாம் எல்லோரும் தயாராகவே இருக்கின்றோம்.

கடந்த இரண்டு ஆண்டுகள் நமக்கு பெரும் சோதனை மற்றும் சவால் நிறைந்த ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில், 2022 ஆம் ஆண்டில் நம் வாழ்வில் ஒரு நல்ல மாற்றம் ஏற்படுமா, வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை கொண்டுவரப் போகும் ஆண்டாக இருக்குமா என்பதை அறிய நாம் ஆவலாக இருப்போம்.

உங்கள் எல்லோருக்கும் 2022 ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா? 12 ராசிகளுக்குமான முழுமையான பலன்கள் இங்கே...

மேஷம்

ஜனவரி 16 ஆம் திகதிக்கு பின் செவ்வாய் தனுசு ராசிக்குள் நுழைவதால், நிதியைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும். இப்பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சாதகமான பலன்கள் கிட்டும். ஏப்ரல் 13 ஆம் திகதி குரு பகவான் அதன் சொந்த ராசியான மீனத்திற்கு செல்வதால், கல்வி முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இருப்பினும் சனி பகவான் பத்தாம் வீட்டில் இருப்பதால், வெற்றி பெறுவதற்காக கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.

2022 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இந்த ராசிக்காரர்கள் சில சவால்களை எதிர்கொள்ள நேரிடும். ஆண்டின் தொடக்கத்தில் சனி மற்றும் புதனின் சேர்க்கையால் மார்ச் மாதம் வரை சில ஆரோக்கிய பிரச்சினைகளை சந்திப்பீர்கள். செவ்வாய் மீன ராசிக்கு செல்வதால் மே மாதத்தின் நடுப்பகுதியில் இருந்து ஓகஸ்ட் வரை செரிமானம் தொடர்பான பிரச்சினைகளை சந்திப்பீர்கள். எனவே உணவில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. செவ்வாயில் நிலையால் குடும்ப வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படும். 

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் 2022 ஆம் ஆண்டு சராசரி பலன்களைப் பெறுவார்கள். ஜனவரி 16 ஆம் திகதி செவ்வாய் தனுசு ராசிக்கு செல்வதால், வாழ்க்கையின் முக்கிய அம்சங்களில் அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். தொழிலில் சாதகமான முடிவுகளைப் பெறுவீர்கள். தொழில் சிறப்பாக இருக்கும். சனி பத்தாம் வீட்டில் இருப்பதால், பல வருமான ஆதாரங்கள் உருவாகும். ஏப்ரல் மாதத்தில் நடக்கும் பல கிரக பெயர்ச்சிகளால், செல்வமும், பணமும் குவியும்.

இருப்பினும், 2022 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மற்றும் ஒக்டோபர் மாதங்களுக்கு இடையில் உங்கள் நிதி நிலைமைகளில் பல ஏற்ற தாழ்வுகள் காணப்படும். ஏப்ரல் மாதத்தில் இருந்து குரு உங்கள் வீட்டில் 11 ஆவது இடத்திற்கு செல்வதால், ஆடம்பர செலவுகளை செய்வீர்கள். 2022 ஆம் ஆண்டின் கடைசி மூன்று மாதங்கள், ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் உங்கள் குழந்தைகளுக்கு சாதகமான காலமாக இருக்கும். 

மிதுனம்

கிரக இயக்கங்களால் மிதுன ராசிக்காரர்களுக்கு பல சவால்கள் மற்றும் வாய்ப்புக்கள் வரும். சனி பகவான் ஜனவரி முதல் மார்ச் வரை 8 ஆவது வீட்டில் இருப்பதால், நிதி இழப்பு மற்றும் பல ஆரோக்கிய பிரச்சினைகள் மற்றும் சவால்களை சந்திக்க நேரிடும். இந்த ராசிக்காரர்களுக்கு சோதனை காலமாக இருக்கும். பெப்ரவரி நடுவில் இருந்து ஏப்ரல் வரை, அசிடிட்டி, மூட்டு வலி, சளி - இருமல் போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்படுவீர்கள்.

ராகு 11 ஆவது வீட்டில் ஏப்ரல் நடுப்பகுதிக்கு பிறகு செல்வதால், இந்த ராசிக்காரர்களின் வாழ்வில் சில சாதகமான மாற்றங்களை கொண்டுவரும். குரு மீன ராசியின் 10ஆவது வீட்டில் சஞ்சரிப்பதல், மாணவர்கள் ஏப்ரல் மற்றும் ஜூலை மாதங்களில் கல்வி வாழ்க்கையில் விரும்பிய முடிவுகளை அடைவார்கள்.

இருப்பினும், ஏப்ரல் 27 ஆம் திகதிக்கு பிறகு சனிபகவான் 9 ஆம் வீட்டில் இருப்பதால், தேர்வு எழுதியுள்ள மாணவர்கள் வெற்றிக்காக நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருக்கும். வேலை தேடுபவர்களுக்கு விரும்பிய வாய்ப்புக்கள் கிடைக்கும். 

கடகம்

2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சனி பகவான் 7 ஆவது வீட்டில் இருப்பதால், வாழ்க்கையில் பல பிரச்சினைகளை சந்திப்பீர்கள். ஆனால் ஜனவரி 16 ஆம் திகதிக்கு பிறகு உங்கள் தன்னம்பிக்கை அதிகரித்து, பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள். இருப்பினும் உங்கள் தாயின் ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் ஏற்படும். எனவே அவரை கவனித்துக் கொள்ளுங்கள். ஏப்ரல் மாதத்தில் பல கிரக பெயர்ச்சிகள் பெறுகின்றன.

எனவே ஏப்ரல் இறுதியில் இருந்து ஜூலை நடுப்பகுதி வரை உங்களின் நிதி நிலையில் பெரிதும் பாதிக்கப்படும். ஆனால் குரு 9 ஆம் வீட்டிற்கு சென்ற பின், நிலைமைகள் மேம்படும். மேஷத்தில் ராகுவின் பெயர்ச்சியானது, பல வேலை வாய்ப்புக்களைத் தரும். இது செப்டம்பர் வரை நல்ல அதிர்ஷ்டத்தை வழங்கும். ஜூன்-ஜூலைக்கு இடையில், செவ்வாய் மேஷத்தில் நுழைவதால், திருமண வாழ்வில் உள்ள பிரச்சினைகள் நீங்கும். 

சிம்மம்

2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சிம்ம ராசியின் அதிபதியான சூரியன் 5 ஆம் வீட்டில் இருப்பதால், நிதி நிலைமைகள் மேம்படும். ஜனவரி இறுதியில் இருந்து மார்ச் வரை உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெப்ரவரி 26 ஆம் திகதியில் செவ்வாய் 6 ஆம் வீடான அதிர்ஷ்ட வீட்டிற்கு வருவதால், தொழில் வாழ்க்கையை பெரிய வெற்றியைக் காண்பீர்கள்.

இருப்பினும், பெப்ரவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் சில கிரக சேர்க்கைகள் காரணமாக, எச்சரிக்கையாக இருக்க பரிந்துரைக்கப்படுகிறது. ஏப்ரல் மாதத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத நிகழ்வுகள் நடைபெறும். ஏப்ரல் 12 ஆம் திகதி மேஷத்திற்கு ராகு செல்வதால், சில ஆரோக்கிய பிரச்சினைகளை சந்திப்பீர்கள். எனவே இக்காலத்தில் ஆரோக்கியத்தில் கவனத்தை செலுத்துங்கள்.

மீனத்திற்கு செல்லும் குருவால் ஏப்ரல் 13 ஆம் திகதியில் இருந்து ஓகஸ்ட் வரை அதிர்ஷ்டமான காலமாக இருக்கும். இடைநிலைக் கல்வியைத் தொடரும் மாணவர்கள் தங்கள் கல்வி முயற்சிகளில் விரும்பிய வெற்றியைப் பெறுவார்கள்.

ஏப்ரல் 12 ஆம் திகதிக்கு பிறகு மேஷத்திற்கு செல்லும் ராகுவால் உங்கள் உயர் அதிகாரிகளுடன் நல்லுறவை ஏற்படுத்துவீர்கள். இது உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் வருமான உயர்விற்கான வாய்ப்பை அதிகரிக்கும். ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில், திருமணமான தம்பதிகள் தங்கள் பிரச்சினைகள் நீங்கி, தங்கள் துணையுடன் சுற்றுலா செல்ல திட்டமிடலாம். ஆகஸ்ட் 10 முதல் அக்டோபர் வரை ரிஷப ராசியில் செவ்வாய் இருப்பது அதிர்ஷ்டத்தை வழங்கும். 

கன்னி

ஜனவரி மாதத்தில் செவ்வாய் தனசு ராசிக்கு செல்வதால், கன்னி ராசிக்காரர்கள் ஆண்டின் தொடக்கத்தில் பெரும் செல்வத்தையும், நிதி செழிப்பையும் பெறுவார்கள். இருந்தாலும், உடல்நிலை பாதிக்கப்படலாம். ஏப்ரல், ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நன்றாக இருக்காது. பிப்ரவரி 26 ஆம் திகதி செவ்வாய் மகரத்திற்கு செல்வதால், மாணவர்கள் கல்வியில் நம்பிக்கையான முடிவுகளை பெறுவீர்கள். மார்ச் மாதத்தில் சனி, செவ்வாய், புதன் மற்றும் சுக்கிரன் இணைந்திருப்பதால், நிதி நிலைமை சாதகமாக இருக்கும்.

புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். ஏப்ரல் - இறுதியில் இருந்து ஜூலை நடுப்பகுதி வரை, சனி உங்கள் ஆறாவது வீட்டில் கும்ப ராசியில் சஞ்சரிப்பதால், உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். துலாம் ராசிக்கு புதன் செல்வதால், அக்டோபர் மாதத்தில் இருந்து நவம்பர் நடுப்பகுதி வரை உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையிலான உறவு வலுவடையும். 

துலாம்

2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் துலாம் ராசிக்காரர்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் சாதகமான பலன்களைப் பெறுவார்கள். ஜனவரி நடுப்பகுதியில் தனுசு ராசியில் செவ்வாய் சஞ்சரிப்பதால் சாதகமான நிதி முடிவுகள் மற்றும் லாபம் உண்டாகும். மார்ச் மாதத்தில் பல கிரகங்களின் சேர்க்கையால் பொருளாதார வெற்றியும், சீரான பண வரவும் உண்டாகும்.

மாணவர்கள் கல்வித் துறையில் நம்பிக்கைக்குரிய முடிவுகளைப் பெறுவார்கள். வெளி நாடு, வேலை அல்லது கல்வி தொடர்பான அனைத்தும் மே மற்றும் நவம்பர் மாதங்களுக்குள் நிறைவேறும். மேஷத்திற்கு செல்லும் ராகுவால், காதலர்கள் மற்றும் திருமணமானவர்களுக்கு வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் ஏற்படக்கூடும். திருமணமாகாதவர்கள் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் திருமணம் செய்து கொள்ளலாம். 

விருச்சிகம்

2022 ஆம் ஆண்டு விருச்சிக ராசிக்காரர்களுக்கு கலவையான பலன்களைத் தரும். 2022 ஆம் ஆண்டின் தொடக்கம் முதல் ஏப்ரல் வரை தேவையற்ற செலவுகள் இருக்கும். ஏப்ரல் மாத இறுதியில் சனி கும்ப ராசியில் பெயர்ச்சியாவதால், தொழில், நிதி மற்றும் குடும்ப வாழ்க்கை ஆகியவற்றில் கலவையான முடிவுகளைத் தரும். ஏப்ரல் நடுப்பகுதியில் இருந்து நிதி நிலைமைகளில் பெரும் முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.

ராகு பெயர்ச்சியால் ஆரோக்கியம் மேம்படும். கிரக நிலைகளால் மே மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையே நல்ல பண வரவைப் பெறுவீர்கள். ஆக்ஸ்ட் முதல் அக்டோபர் வரை உங்கள் தாய் மற்றும் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

ஏப்ரல் மாத கடைசியில் உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவருக்கும் இடையே சிறிய பிரச்சினைகளில் சிறு சிறு வாக்குவாதங்கள் மற்றும் சண்டைகள் ஏற்படலாம். ஆனால் செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஒருவரையொருவர் புரிந்துகொள்வதற்கும் நல்ல நேரத்தை செலவிடுவதற்கும் நிறைய நேரம் கிடைக்கும். 

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு 2022 ஆம் ஆண்டு நிதியைப் பொறுத்தவரை சாதகமாக இருக்கும். 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஜனவரி மாதம் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சியால் நிதி நிலைமை வலுபெறும். மாணவர்களுக்கு 2022 ஆம் அண்டு சாதகமாக இருக்கும். பிப்ரவரி முதல் ஜூன் வரை உங்கள் கடின உழைப்பின் பலனைப் பெறுவீர்கள். ஆண்டின் தொக்கத்தில் தனுசு ராசிக்கு செவ்வாய் செல்வதால், மனக் கவலைகள் மற்றும் மன உளைச்சல் ஏற்பட்டு, குடும்ப வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்படும்.

காதல் மற்றும் திருமண வாழ்க்கையைப் பற்றி பேசுவதானால், சூரியன் மகர ராசியில் சனியுடன் இணைந்திருப்பதால், பிரச்சனைகள் மற்றும் தவறான புரிதல்களை ஏற்படுத்தும். உங்கள் வார்த்தைகளைக் கட்டுப்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். ஜூன் முதல் ஜூலை 20 வரை உங்கள் திருமண வாழ்க்கையில் பெரிய முன்னேற்றம் இருக்கும்.

தொழிலைப் பற்றி பேசுவதானால், நவம்பர் முதல் புதிய வேலை வாய்ப்புக்கள் வரும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, ஜூன் மாதத்தில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால், அக்டோபர் வரை எந்த நோயும் அண்டாமல் உடல் ஆரோக்கியத்தை கவனித்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. 

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு 2022 ஆம் ஆண்டு ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். ஆண்டின் தொடக்கத்தில் சனி தனது சொந்த ராசியில் இருப்பதால், தொழில் நிதி மற்றும் கல்வித்துறைக்கு சாதகமாக இருக்கும். இருப்பினும் ஏப்ரல் மாத கிரக நிலைகளால் பல சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும். நிதியைப் பொறுத்தவரை, செவ்வாய் 12 ஆவது வீட்டில் இருப்பதால், பணம் குவிப்பதில் தடைகள் ஏற்படலாம்.

வணிகர்களுக்கு, செப்டம்பர் முதல் ஆண்டு இறுதி வரை பயனுள்ள காலமாக இருக்கும். ஏப்ரல் மாதத்தில் சனி கும்ப ராசிக்கு செல்வதால், ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையே செரிமானம் அல்லது வயிறு தொடர்பான பிரச்சினைகளை சந்திப்பீர்கள்.

எனவே மருத்துவரை தவறாமல் சந்தியுங்கள். விருச்சிக ராசியில் கேது இருப்பது, ஆண்டின் தொடக்கத்தில் குடும்பத்தில் பிரச்சனைகளை உண்டாக்கும். சிறிய விஷயங்களுக்கு எல்லாம் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

காதலிப்பவர்கள் மற்றும் திருமணமானவர்களுக்கு கலவையான முடிவுகளைத் தரும். திருமணமனவர்ளுக்கு ஆண்டின் தொடக்கத்தில் சிறு பிரச்சினைகள் இருக்கலாம். ஆனால் ஆகஸ்ட் முதல் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். இக்காலத்தில் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் பயணம் மேற்கொள்ள திட்டமிடுவீர்கள். இந்த ஆண்டின் இறுதி திருமணமானவர்களுக்கு நன்றாக இருக்கும். 

கும்பம்

2022 ஆம் ஆண்டு கும்ப ராசிக்காரர்களுக்கு பெரும்பாலும் சாதகமாக இருக்கும். நிதியைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும். ஜனவரி மாதத்தில் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி பொருளாதார ரீதியாக நன்மை தரும். மார்ச் மாதத்தில் உருவாக்கும் 4 கிரகங்களின் சேர்க்கை, உங்கள் முயற்சிகளில் வெற்றி பெறவும், நல்ல செல்வத்தைப் பெறவும் உதவும். இருப்பினும், ஏப்ரல் 12 ஆம் திகதி மேஷம் செல்லம் ராகுவால், நீங்கள் சில திடீர் முடிவுகளை எடுக்கக்கூடும்.

இந்த ஆண்டு முழுவதும் உங்கள் ஆரோக்கியம் சராசரியாக இருக்கும். நீங்கள் ஜனவரி மாதத்தில் மன அழுத்தத்தால் பாதிக்கப்படலாம். ஏப்ரல் மாதத்தில் உங்கள் உடன் பிறந்தவர்கள் பல ஆரோக்கிய பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். ஜனவரி மாதத்தில் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சியால், வேலை மற்றும் வணிகம் இரண்டிலும் வெற்றி கிட்டும். இருப்பினும், செப்டம்பர் முதல் நவம்பர் வரை உயர் அதிகாரிகளுடன் சிறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

திருமணமானவர்களுக்கு கலவையான ஆண்டாக இருக்கும். இந்த ஆண்டின் ஆரம்ப நாட்களில் உங்கள் மனைவி மற்றும் மாமியாருடன் நீங்கள் வாக்குவாதங்களில் ஈடுபடலாம் மற்றும் ஏப்ரல் வரை சூழ்நிலைகள் மேம்படாமல் போகலாம். ஏப்ரல் மாதத்தில் திருமணமாகாதவர்கள் திருமணம் செய்ய வாய்ப்புள்ளது. 

மீனம்

2022 ஆம் ஆண்டு மீன ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். இந்த ஆண்டின் பெரும்பகுதியில் நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். ஏப்ரல் மாதத்தில் நடக்கும் சனி பெயர்ச்சியால் புதிய வருமானம் கிட்டும். ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையே கிரக நிலைகள் மாறிக் கொண்டே இருப்பதால், வாழ்க்கையில் பல நிதி ஏற்ற இறக்கங்களைக் காண்பீர்கள். தொழில் ரீதியாக விரும்பிய பலனைப் பெறுவார்கள். இந்த ஆண்டு பதவி உயர்வைப் பெறலாம். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் நல்ல முடிவைப் பெறுவார்ள்.

குடும்ப வாழ்க்கையைப் பொறுத்தவரை, குடும்பத்தை விட்டு விலகி இருக்க நேரிடும். மே மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் உங்கள் தாயின் ஆரோக்கியம் மேம்படும். மே முதல் செப்டம்பர் வரை, ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மே மாதத்தில் 3 கிரகங்களின் சேர்க்கையால், உங்கள் குடும்பத்தினர் மற்றும் பெரியவர்களிடமிருந்து ஆசீர்வாதம் கிடைக்கும்.

திருமண வாழ்க்கையைப் பொறுத்தவரை, இந்த ஆண்டு திருமணமானவர்களுக்கு அற்புதமாக இருக்கும். 2022 ஆம் ஆண்டின் செப்டம்பர் முதல் நவம்பர் வரையிலான காலக்கட்டத்தில் சிறிய விஷயங்களுக்கு வாக்குவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.   

ReeCha
மரண அறிவித்தல்

பாண்டியன்தாழ்வு, Wembley, United Kingdom

22 Aug, 2025
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Villeneuve-le-Roi, France

21 Aug, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், London, United Kingdom

03 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sankt Ingbert, Germany

03 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, பரந்தன், வவுனியா, Borken, Germany

26 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Bad Friedrichshall, Germany

24 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, Chenevières, France

21 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நுணாவில், கொச்சிக்கடை, நீர்கொழும்பு, Melbourne, Australia

19 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்

சரசாலை தெற்கு, Toronto, Canada

15 Aug, 2025
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், தேவிபுரம்

21 Aug, 2025
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Wembley, United Kingdom

22 Aug, 2022
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொழும்பு, Scarborough, Canada

21 Aug, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, Vitry-sur-Seine, France

12 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, அனலைதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

20 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

Atchuvely, Montreal, Canada, கொழும்பு, Hatton

20 Aug, 2010
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, உடுவில், Bochum, Germany, Scarborough, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, Montreal, Canada, Scarborough, Canada

22 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, கனகராயன்குளம், சென்னை, India, திருச்சி, India

21 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டடி, Colombes, France

01 Sep, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில், Vaughan, Canada

19 Aug, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021