தீவிரவாதம் உலகில் எங்கு செயற்பட்டாலும் ஐ.எஸ் அமைப்பாகவிருந்தாலும் அதனை முற்றாக ஒழித்துக்கட்ட வேண்டும்!
நியூஸிலாந்தில் ஸ்ரீலங்காப் பிரஜையினால் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர் இவ்வாறான சம்பவத்தினால் நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்து்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
தீவிரவாதம் உலகில் எங்கு செயற்பட்டாலும் அதனை முற்றாக ஒழித்துக்கட்ட வேண்டும். ஐ.எஸ் தீவிரவாத அமைப்பாக இருந்தாலும் அதனை ஒழிக்க வேண்டும். 30 வருடப் போரை எதிர்கொண்ட நாடாக நாங்கள் இதனை நன்கு அறிந்து வைத்திருக்கின்றோம்.
நியூஸிலாந்தில் நேற்று இடம்பெற்ற சம்பவம் மிகுந்த கவலையளிக்கின்றது. அத்துடன் இந்த சம்பவத்தின் ஊடாக ஸ்ரீலங்கா மீது உலகளாவிய ரீதியில் அவப்பபெயரையே ஏற்படுத்துகிறது. நியூஸிலாந்து போன்ற அமைதியான நாட்டிற்கு ஸ்ரீலங்காவிலிருந்து வர்த்தக மற்றும் கற்றல் நடவடிக்கைகளுக்காகப் பலரும் செல்கின்றனர்.
இந்நிலையில் அங்கு சென்ற ஸ்ரீலங்கா பிரஜை ஒருவரால் நடத்தப்பட்டுள்ள தாக்குதல் சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.