மொட்டு கட்சியின் அடுத்த தலைவர் யார்! மனம் துறந்தார் மகிந்த
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை பொறுப்பு சிரேஷ்ட உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்படுமென முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அத்துடன், கட்சியின் தலைமை பொறுப்பேற்க வேண்டிய நபரை தெரிவு செய்யும் அதிகாரம் மக்களிடம் மாத்திரம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பிலுள்ள மயூராபதி கோவிலுக்கு இன்று பயணம் செய்த அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
தெரிவு செய்யும் பொறுப்பு
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை பொறுப்பு சரியான நேரத்தில் தகுந்த நபருக்கு வழங்கப்படும்.
எம்மிடம் தற்போது அதிகளவான இளைஞர்கள் இருக்கிறார்கள். இதன்படி, இளைஞர்களுக்கா அல்லது சிரேஷ்ட உறுப்பினர்களுக்கா தலைமை பொறுப்பை வழங்குவது என்பது ஆராயப்பட வேண்டும்.
அத்துடன், கட்சியின் தலைமையை தெரிவு செய்யும் பொறுப்பு பொது மக்களிடமே உள்ளது. மேலும், ராஜபக்ச குடும்பத்தின் உறுப்பினர் ஒருவர் கட்சியின் தலைமையை ஏற்பாரா என்பது குறித்து எதுவும் கூற முடியாது.
கட்சியின் தலைவராக மக்கள் என்னை தெரிவு செய்தார்கள். அதேபோன்று புதிய தலைவரையும் அவர்களே தெரிவு செய்வார்கள்.
சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பில் இதுவரை எந்தவொரு பேச்சுவார்த்தையும் முன்னெடுக்கப்படவில்லை. அவருடன் நாம் தொடர்ந்தும் இணைந்து பணியாற்றி வருகிறோம். என தெரிவித்துள்ளார்.