அடுத்த ஜனாதிபதி வேட்பாளரும் கோட்டாபயவே -வெளிவந்தது அறிவிப்பு
srilanka
gotabaya
podujana peramuna
By Sumithiran
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளரும் கோட்டாபய ராஜபக்சதான் என கட்சி அறிவித்துள்ளது.
கொழும்பில் இன்று புதன்கிழமை நடந்த ஊடக சந்திப்பில் உரையாற்றிய துறைமுக அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன இதனைத் தெரிவித்தார்.
நாட்டின் அரசியலமைப்பிற்கமைய ஜனாதிபதி ஒருவர் இருமுறை போட்டியிடலாம் என்ற அடிப்படையில் 2024ஆம் ஆண்டிலும் அதன் பின்னரும் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷவே இருப்பார் என்று அவர் கூறினார்.
இதேவேளை அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக பஸில் ராஜபக்சவை நிறுத்தவுள்ளதாக நாடாளுமனற உறுப்பினர் பதவியிலிருந்து விலகிய சாந்த கெட்டகெட தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி