மொட்டுவின் திட்டம் அம்பலம் : ரணிலுக்கு அடிக்கவுள்ள அதிஷ்டம்
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அடுத்த அதிபர் வேட்பாளராக தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கவை நியமிக்க வேண்டும் என அரசாங்க அமைச்சர்கள் குழுவொன்று யோசனை முன்வைத்துள்ளது.
இதன்படி எதிர்வரும் அதிபர் தேர்தலில் பொதுஜன பெரமுனவும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து புதிய கூட்டணியை உருவாக்கி ரணில் விக்ரமசிங்கவை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என கலந்துரையாடப்பட்டுள்ளது.
மீண்டும் நாட்டில் நெருக்கடிகள் உருவாகலாம்
நாட்டைக் கட்டியெழுப்பும் நோக்கில் விக்ரமசிங்க தற்போது முன்னெடுத்து வரும் வேலைத்திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு மேலும் ஐந்து வருடங்கள் பதவியில் அமர்த்த வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் வேறு யாராவது அதிபரானால் இந்த வேலைத்திட்டம் குழம்பும் எனவும் மத்தியில் ஸ்தம்பித்து மீண்டும் நாட்டில் நெருக்கடிகள் உருவாகலாம் என அவர்கள் தெரிவித்தனர்.
அதிபர் வேட்பாளராக ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் 5 வருடங்களின் பின்னர் அவர் நிச்சயமாக அதிபராக வர முடியும். எனவே கவலைப்படாமல் அந்த நேரத்தை அவர் செலவிட வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ரணில் விக்ரமசிங்கவுக்கு அடுத்த வாய்ப்பு
ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை இந்த நாட்டின் அடுத்த அதிபராக்கும் திட்டம் உள்ளதால், ரணில் விக்ரமசிங்கவுக்கு அடுத்த வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமென இராஜாங்க அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.