பாடசாலை ஒன்றில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்று! எடுக்கப்பட்ட அடுத்தகட்ட நடவடிக்கை
Sri Lanka
Corona Virus
Passara
Badulla
By Vasanth
பதுளை- பஸ்ஸர தேசிய பாடசாலையில் 6 மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
குறித்த பாடசாலையில் கல்வி பயிலும் 4 மாணவர்கள் மற்றும் 2 மாணவிகளுக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் குறித்த மாணவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் அவர்கள் சென்று வந்த பகுதிகள் இனங்காணப்பட்டு அப்பகுதிகளிலும் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வதாகவும் கூறப்படுகின்றது. இதேவேளை ஹம்பலந்தோட்டை - மாகோலனிய பகுதிக்கு பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் 34 பேர், கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி