பிரித்தானிய மக்களை மத்திய கிழக்கிலிருந்து மீட்க பறக்கும் அடுத்த விமானம்
மத்திய கிழக்கு பகுதிகளில் இருந்து தனது குடிமக்களை நாட்டிற்கு திரும்பக் கொண்டு வர ஏற்பாடு செய்துள்ள மேலும் ஒரு சிறப்பு விமானம் விரைவில் புறப்படவுள்ளதாக பிரித்தானிய அரசாங்கம் அறிவித்தள்ளது.
துபாயில் இருந்து இந்த விமானம் அடுத்த சில நாட்களில் புறப்படும் என பிரித்தானிய வெளிவிவகார அலுவலகம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு நிலைமை
இது மத்தியகிழக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆறாவது விமானம் ஆகும், முன்னதாக ஓமானில் இருந்து 3 விமானங்களும் துபாயில் இருந்து 2 விமானங்களும் பிரிட்டிஷ் குடிமக்களை திரும்ப அழைத்துச் சென்றுள்ளன.

மத்திய கிழக்கில் சில நாடுகளின் வான்வழிகள் இன்னும் மூடப்பட்டுள்ளன என்றும், அங்குள்ள பாதுகாப்பு நிலைமை வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது என்றும் பிரித்தானிய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
மேலும், மார்ச் 1 முதல் புதன்கிழமை காலை வரை, மத்திய கிழக்கிலிருந்து 57,000க்கும் அதிகமான பிரிட்டிஷ் குடிமக்கள் திரும்பியுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |