ஈரான் புரட்சிகர காவல்படையின் தலைமையகத்தை தாக்கிய இஸ்ரேல் போர் விமானங்கள்!
தெஹ்ரானில் உள்ள ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IGRC) தலைமையகத்தில் செயல்பட்டு வந்த ஈரான் படையினரை இஸ்ரேல் போர் விமானங்கள் கண்டறிந்து தாக்கியதாகவும், அதில் அவர்கள் உயிரிழந்ததாகவும் இஸ்ரேல் பாதுகாப்பு படை(IDF) தெரிவித்துள்ளது.
இது தொடர்பான காணொளியையும் இஸ்ரேல் விமானப் படை வெளியிட்டுள்ளது.
முக்கிய கட்டமைப்புகள்
இந்த நிலையில், இன்று ஈரான் ஆட்சி சார்ந்த பல முக்கிய கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு விமானத் தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
צפו בתיעוד: חוסלו חיילים ממשטר הטרור האיראני שפעלו במפקדה של משמרות המהפכה https://t.co/T3s4Way3Cp pic.twitter.com/s9L2fFy6E4
— Israeli Air Force (@IAFsite) March 11, 2026
இஸ்ரேல் பாதுகாப்பு படை வெளியிட்ட தகவலின்படி, தெஹ்ரானில் நடைபெற்ற பிற தாக்குதல்கள் கீழ்வரும் இடங்களை இலக்காக வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளன.
- இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் விமானப்படை தலைமையகங்கள் மற்றும் கட்டளை மையங்கள்,
- இமாம் ஹொசைன் பல்கலைக்கழகம் வளாகம் –இது IRGC-இன் இராணுவ கல்வி நிறுவனமாகவும் ஈரான் படையினர் செயல்பாட்டு தளமாகவும் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
- பாலிஸ்டிக் ஏவுகணைகள் சேமிப்பு மற்றும் உற்பத்தி மையங்கள்
- வான்வழி பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகள்
தாக்குதலின் நோக்கம்
மேலும், நாட்டின் பிற பகுதிகளில், ஈரானின் உள்நாட்டு பாதுகாப்பு படைகள், பாசிஜ் எனப்படும் துணைப் படை அமைப்பு மற்றும் ஈரான் புலானாய்வு அமைச்சின் தலைமையகங்களையும் இஸ்ரேல் தாக்கியதாக தெரிவித்துள்ளது.

Image Credit: Le Monde
இந்த தாக்குதல்கள் போரின் புதிய கட்டமாக நடைபெறுகின்றன என்றும், ஈரானின் முக்கிய இராணுவ மற்றும் பாதுகாப்பு அமைப்புகளுக்கு மேலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் இஸ்ரேல் பாதுகாப்பு படை கூறியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |