நைஜீரியாவில் 10 லட்சத்திற்கு மேற்பட்ட கொரோனா தடுப்பூசிகள் அழிப்பு !
நைஜீரியாவில் போதிய மருத்துவ கட்டமைப்பு வசதி இல்லாததனால் 10 லட்சத்திற்கு மேற்பட்ட கொரோனா தடுப்பூசிகளை மண்ணில் புதைத்து அழித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வளர்ந்த, வளர்ந்து வரும் நாடுகளில் இருந்து நன்கொடையாக பெறப்பட்ட 10 லட்சத்திற்கு மேற்பட்ட அஸ்ட்ராஜெனகா நிறுவனத்தில் கொரோனா தடுப்பூசிகளை நைஜீரிய அரசு அழித்துள்ளது.
நைஜீரியாவுக்கு கொரோனா தடுப்பூசி உலக சுகாதார அமைப்பு மூலம் வழங்கப்பட்டு வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகளில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், கையிருப்பில் உள்ள தடுப்பூசிகளை செலுத்துவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் 10 லட்சத்து 66 ஆயிரத்து 214 கோரோனா தடுப்பூசி டோஸ்களை ஓரிரு வாரத்தில் காலாவதியாகும் சூழ்நிலையில் இருந்துள்ளது.
அந்த வகையில் கையிருப்பில் இருந்த அஸ்ட்ராஜெனகா தடுப்பூசிகள் காலாவதியானதால் சுகாதாரத்துறை அதிகாரிகள் தடுப்பூசிகளை மண்ணில் புதைத்து அழித்துள்ளனர்.
நைஜீரியாவில் தடுப்பூசி தொடர்பாக எதிர்மறை தகவல்கள் பரவியதால் தடுப்பூசி மீது மக்கள் தயக்கம் காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.