துப்பாக்கியுடன் நுழைந்த கும்பல் சரமாரியாக தாக்குதல்! 10 பேர் பலி- நைஜீரியாவில் துயரம்
நைஜீரியாவில் கிராம மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேற்கு ஆபிரிக்க நாடான நைஜீரியாவில் ஐ.எஸ்., அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளும், பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்களும் செயற்பட்டு வரும் நிலையில், இந்த அமைப்புகள் பொதுமக்கள், பாதுகாப்புப் படையினரை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், அந்நாட்டின் கடுனா மாகாணத்தின் ஜங்கோ - கடஃப் நகரில் உள்ள யக்பக் மற்றும் அங்வான் ரகுகோ ஆகிய 2 கிராமங்களுக்குள் நேற்று துப்பாக்கியுடன் நுழைந்த கும்பல் அங்கிருந்தவர்கள் மீது மோசமாக தாக்குதல் நடத்தினர்.
இந்தத் துப்பாக்கிச்சூட்டு தாக்குதலில் இரு கிராமங்களிலும் சுமார் 10 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தை தொடர்ந்து ஜங்கொ-கடஃப் பகுதியில் இராணுவம் மற்றும் காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது