துருக்கியில் இரவு விடுதியில் தீ விபத்து: பலர் பலி
Turkey
World
By Laksi
துருக்கியில் இரவு விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 29 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த அனர்த்தம் இஸ்தான்புல்லில் உள்ள ஒரு உயரமான கட்டிடத்தின் அடித்தளத்தில் அமைந்துள்ள இடத்திலேயே ஏற்பட்டுள்ளதாக இஸ்தான்புல் ஆளுநர் தாவுட் குல் தெரிவித்துள்ளார்.
எனினும் தீ விபத்துக்கான காரணம் தெரியவரவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கைது
தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் ஊழியர்கள் என்று கூறிய அவர், ஆனால் அவர்கள் ஒப்பந்தகாரர்களா அல்லது இரவு விடுதியின் ஊழியர்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றார்.
இவ்விபத்து தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் தொடர்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களில் மூன்று பணியிட அதிகாரிகள், இரவு விடுதி மேலாளர் மற்றும் புதுப்பித்தல் மேலாளர் ஆகியோர் அடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 1 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி