சுற்றுலா பயணிகளை ஈர்க்க ஒன்பது வளைவு பாலத்திற்கு மின் விளக்கு அமைக்கும் திட்டம் தோல்வி
உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முக்கிய இடமான டெமோதர ஒன்பது வளைவுப் பாலத்தில் மின் விளக்கு திறப்பு விழா காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மத்திய கலாசார நிதியம் தெரிவித்துள்ளது.
தனியார் நிலம் மூலம் மின்சார இணைப்பைப் பெறுவதில் ஏற்பட்ட சர்ச்சையால் இந்த தாமதம் ஏற்பட்டதாக பணிப்பாளர் நாயகம்கலாநிதி நிலன் கூரே தெரிவித்தார்.
தனியார் நில உரிமையாளர் எதிர்ப்பு
பாலம் மற்றும் சுற்றியுள்ள பகுதிக்கு விளக்குகளை வழங்குவதற்காக நிறுவப்பட்ட மின்மாற்றிக்கு மின்சாரம் வழங்க தேவையான மின் கேபிள்களை அனுமதிப்பதற்கு நில உரிமையாளர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மின்சார இணைப்பைப் பெறுவதற்கான மாற்று முறைகள் திட்டமிடப்பட்டுள்ளன.ஆனால் செயல்முறை தொழில்நுட்ப ரீதியாக சிக்கலானது என்று அவர் குறிப்பிட்டார். இந்த மாதம் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த திட்டம், புதிய திகதி குறிப்பிடப்படாமல் தாமதமாகியுள்ளது.
சுற்றுலா வலயமாக மேம்படுத்துவதே முயற்சியின் நோக்கம்
ஒன்பது வளைவுப் பாலம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களை சுற்றுலா வலயமாக மேம்படுத்துவதே இந்த முயற்சியின் நோக்கமாகும், மேலும் இது மத்திய கலாசார நிதியம் மற்றும் தொடருந்து திணைக்களத்தின் கூட்டு முயற்சியாக மேற்கொள்ளப்படுகிறது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |