நிபா வைரஸ் குறித்து சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவித்தல்
World Health Organization
Keheliya Rambukwella
Sri Lanka
By Beulah
நிபா வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உலக சுகாதார ஸ்தாபனத்துடன் தொடர்ந்து கலந்துரையாடி வருவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கண்டியில் இன்று (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
தடுப்பு நடவடிக்கைகள்
“நிபா வைரஸ் நாட்டிற்குள் நுழைவதைத் தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சின் செயலாளர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் வைரஸ் தொடர்பான நிபுணர்கள் கலந்துரையாடி வருகின்றோம்.
நிபா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் பதிவாகினால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.” என்றார்

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்