சில நாடுகளில் பரவும் நிபா வைரஸ்! தீவிர கண்காணிப்பில் இலங்கை
srilanka
virus healthmnistery
By Vasanth
உலக நாடுகள் சிலவற்றில் நிபா வைரஸ் கண்டறியப்பட்டுள்ள நிலையில், அந்த வைரஸ் தொடர்பில் இலங்கை தீவிரமாக கண்காணித்துவருவதாக பொது சுகாதார சேவைகளின் துணை பொது பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
நிபா வைரஸ் தொடர்பில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் பேசியதாவது, இலங்கையில் கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்தவும், வைரஸின் பிறழ்ந்த பதிப்புகளைக் கண்டறியவும் நடவடிக்கை எடுக்கும்போது, நிபா வைரஸ் உட்பட பிராந்தியத்தில் பரவும் பிற வைரஸ்களை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
எவ்வாறாயினும், கடுமையான நடவடிக்கை எடுக்க இலங்கைக்கு உலக சுகாதார அமைப்பிலிருந்து எந்த பரிந்துரையும் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால் நாங்கள் நிலைமைகளை கண்காணித்து வருகிறோம்," என்று அவர் கூறினார்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்