மின்சார சபை ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவுகள் இல்லை: அமைச்சர் கஞ்சன அதிரடி
மின்சார சபை ஊழியர்களுக்கு 2023 ஆம் ஆண்டிற்கான எந்தவொரு மேலதிக கொடுப்பனவுகளும் வழங்கப்பட மாட்டாது என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
மின்சார சபை பொது முகாமையாளர் மற்றும் தலைவருக்கு கடிதம் மூலம் இதனை அவர் அறிவித்துள்ளார்.
அந்தக் கடிதத்தில், செயற்பாடுகள் மற்றும் நிர்வாகத்தின் செலவைக் குறைப்பதற்கான முன்னர் கொடுக்கப்பட்ட அறிவுறுத்தல்கள் மற்றும் கொள்கை முடிவுகளுக்கு அமைய மின்சார சபை ஊழியர்களுக்கு முன்னர் செலுத்தப்பட்ட ஊக்கத்தொகைகள் மற்றும் கொடுப்பனவுகள் இதில் அடங்கும் என்றும்.
2015 முதல் ஒவ்வொரு 3 வருடங்களுக்கும் வழங்கப்படும் 25% சம்பள உயர்வும் வழங்கப்பட மாட்டாது, மேலும், மின்சார சபை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட 21 பல்வேறு கொடுப்பனவுகள் மற்றும் ஊக்கத்தொகைகள், 2023 இல் செலுத்தப்பட்ட தொகைகள், அவர்கள் எவ்வாறு செலுத்தப்பட்டது என்பது குறித்து தனக்கு அறிவிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை இன்றைய மாலை நேர செய்தித் தொகுப்பில் காண்க.