அரசின் முக்கிய அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சிகர தகவல்
எதிர்வரும் நவம்பர் 15ஆம் திகதிக்கு பின்னர் அனைத்து அபிவிருத்தி திட்டங்களும் நிறுத்தப்படும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா(Nimal Siripala de Silva) தெரிவித்துள்ளார்.
நிர்மாணப்பணிகளுக்கு தேவையான சிமெந்து பற்றாக்குறையே இதற்கான காரணம் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது நாட்டின் மொத்த சிமெந்து தேவையில் 65% மட்டுமே உள்ளதாகவும், அடுத்த இரண்டு வாரங்களுக்குள் சிமெந்து இருப்புக்கள் தீர்ந்துவிடும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
புதிய சிமெந்து இறக்குமதிக்கு தேவையான டொலர்களை கண்டுபிடிப்பது பாரிய நெருக்கடி எனவும் அவர் குறிப்பிட்டார். பதுளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அண்மையில் சிமெந்து விலை 100 ரூபாவினால் அதிகரிக்கப்பட்ட போதிலும் அந்த அதிகரிப்பு போதுமானதாக இல்லை என சிமெந்து இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். மீண்டும் விலை உயர்வை வழங்காத பட்சத்தில் சிமெந்து இறக்குமதியை முற்றாக நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும் என இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.