சர்ச்சையில் சிக்கிய லொஹான் ரத்வத்த கைது செய்யப்படுவாரா? பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வெளியிட்ட புதிய தகவல்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த உள்ளிட்ட குழுவினர் மது போதையில் அநுராதபுரம் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைக்குள் சென்று அடாவடியில் ஈடுபட்டமை தொடர்பில் இதுவரை எந்த முறைப்பாடுகளும் பதிவாகவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
அநுராதபுரம் மற்றம் வெலிக்கடை பொலிஸ் நிலையங்களில் இது தொடர்பில் ஏதேனும் முறைப்பாடுகள் பதிவாகி உள்ளதா என இன்று ஆராயப்பட்டது.
எனினும் இன்றுவரை இது தொடர்பில் யாரும் முறைப்பாடு பதிவு செய்யப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, குறித்த சம்பவத்தில் லொஹான் ரத்வத்த தனது பதவியிலிருந்து விலகிய நிலையில், சம்பந்தப்பட்ட சிறைச்சாலை அதிகாரிகள் அந்த சம்பவம் குறித்து முறைப்பாடு செய்ய வாய்ப்புள்ளது என்றும் நிஹால் தல்துவ மேலும் கூறினார்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என சிங்கள ஊடகம் ஒன்று வினவியதற்கே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ இதை கூறினார்.