பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கையளிப்பு
பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு (Aruna Jayasekara) எதிராக எதிர்க்கட்சியின் நம்பிக்கையில்லா பிரேரணை இன்று (12) சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் போது கிழக்கு மாகாண தளபதியாகப் பணியாற்றிய அருண ஜயசேகர, தற்போது பாதுகாப்பு பிரதி அமைச்சராக இருப்பது, அத்தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு முரண்பாடு ஏற்படுத்துவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன (Kavinda Jayawardena) தெரிவித்தார்.
அத்துடன் கடமையை தவறவிட்டது, தொடர்புடைய விசாரணைகளின் போது சரியாகச் செயற்படத் தவறியது மற்றும் எதிர்கால விசாரணை முயற்சிகளுக்குத் தடையாக இருந்தது போன்ற குற்றச்சாட்டுகளும் அவருக்கு எதிராக உள்ளன.
நம்பிக்கையில்லா தீர்மானம்
அதன்படி, அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சி முடிவு செய்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்தன உறுதிப்படுத்தினார்.
பிரதி அமைச்சர் அருண ஜெயசேகரவுக்கு எதிராக 19 புள்ளிகள் கொண்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சியினர் வரைந்ததாக முன்னதாக அறிவிக்கப்பட்டது.
இதேவேளை குறித்த பிரேரணை நேற்றைய தினம் சபாநாயகரிடம் கையளிக்கப்படவிருந்த நிலையில் சபாநாயகர் கொழும்பிற்கு வெளியே இருந்த காரணத்தினால் இன்று வரை ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி வெள்ளி, சக கிடாய் வாகன உற்சவம்


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 4 நாட்கள் முன்
