அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு : அநுர வெளியிட்ட அறிவிப்பு
இலங்கையின் அரச சேவைக்கு புதியவர்களை உள்ளீர்ப்பது குறித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, அரச சேவைக்கு 62,000 பேரை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெறும் 2025 ஆம் ஆண்டுக்கான தேசிய இளைஞர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நிதி ஒதுக்கீடு
நாட்டின் எதிர்காலத்தைப் பொறுப்பேற்கும், பொறுப்புள்ள இளைஞர் தலைமைத்துவத்தை உருவாக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இளைஞர்களை அரசியல் கைப்பாவைகளாக மாற்றாமல், நாட்டின் எதிர்காலத்தை வழிநடத்தும் தலைவர்களாக உருவாக்குவதே இதுவரையிலான மாநாட்டின் இலக்காக இருப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இதேவேளை பொதுச் சேவையில் உள்ள அத்தியாவசிய வெற்றிடங்களை நிரப்புவதற்கு 10,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி வெள்ளி, சக கிடாய் வாகன உற்சவம்


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 4 நாட்கள் முன்
