அச்சம் வேண்டாம் : விவசாயிகளுக்கு வெளியான நல்ல செய்தி
Sri Lanka
Ministry of Agriculture
Farmers Issues
By Jaso
இலங்கையில் யால பருவத்திற்கு உரத் தட்டுப்பாடு இல்லை என்று விவசாய திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் ஜி.ஜி.வி. ஷியாமலி தெரிவித்துள்ளார்.
பேராதெனிய, கன்னொருவவில் உள்ள தேசிய விவசாய தகவல் மற்றும் தொடர்பு மையத்தில் இன்று (29) நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசியபோது, மேலதிக பணிப்பாளர் நாயகம் ஷியாமலி இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த பணிப்பாளர் நாயகம்,
யால பருவத்திற்கு உரத் தட்டுப்பாடு இல்லை
இந்த யால பருவத்திற்கான உரத் தேவை குறித்து தேசிய உரச் செயலகத்துடன் தாம் கலந்துரையாடியதாகவும், யால பருவத்திற்கு உரத் தட்டுப்பாடு இல்லை என்று அவர்கள் தமக்கு உறுதியளித்ததாகவும் கூறினார்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்