கோதுமை மா விலையில் இன்று முதல் மாற்றம்
கோதுமை மா ஒரு கிலோகிராமின் விலையை 5 ரூபாவினால் அதிகரிப்பதற்கு ப்ரீமா நிறுவனம் தீர்மானித்துள்ளது.
அந்தவகையில் கோதுமை மாவின் விலையை இன்று (29) முதல் அதிகரிப்பதற்கு ப்ரீமா நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த விலை அதிகரிப்பிற்கு அமைய, இதற்கு முன்னர் 220 ரூபாவாகக் காணப்பட்ட ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் புதிய விலை 225 ரூபாவாகும்.
வர்த்தமானி அறிவித்தல்
போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்துள்ளமையே இந்த விலை உயர்விற்கான காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[FYRL8 ]
இதேவேளை ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த பொது அவசரகால நிலை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.
'டித்வா' (Ditwa) புயலினால் ஏற்பட்ட அனர்த்த நிலைமையைக் கருத்திற்கொண்டு, பொது பாதுகாப்பு மற்றும் நாட்டின் இயல்பு நிலையைப் பேணுதல், பொதுமக்களின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான வழங்கல்கள் மற்றும் சேவைகளைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்லுதல் என்பவற்றைக் குறிக்கோளாகக் கொண்டு இந்த அவசரகால நிலை நீடிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகள், எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோகம், சுகாதார சேவையுடன் தொடர்புடைய அனைத்து சேவைகள் மற்றும் பொதுப் போக்குவரத்து சேவைகள் உள்ளிட்ட பல துறைகளை அத்தியாவசிய சேவைகளாக உள்ளடக்கி வெளியிடப்பட்டிருந்த வர்த்தமானி அறிவித்தல் இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |