எரிபொருள் பற்றாக்குறை - மருத்துவர்களுக்கு ஏற்பட்ட நிலை
எரிபொருள் பற்றாக்குறையினால் மருத்துவர்கள் உட்பட வைத்தியசாலை ஊழியர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருவதாகவும், சில வைத்தியர்கள் மோட்டார் சைக்கிள் மற்றும் துவிச்சக்கர வண்டிகளில் கடமைக்கு சமூகமளித்துள்ளதாகவும் கம்பகாவைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்தார்.
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்குச் செல்லும் அரச ஊழியர்களுக்கு எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுவதில்லை எனவும், இதன் காரணமாக மாவட்ட வைத்திய அதிகாரிகள் கூட துவிச்சக்கர வண்டியில் தான் பணிக்கு செல்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கம்பகாவில் உள்ள முன்னணி வைத்தியசாலையொன்றின் வைத்திய அத்தியட்சகர் ஒருவர், கடமையின் போது எரிபொருள் வரிசையில் நான்கைந்து மணித்தியாலங்கள் செலவிட நேரிட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
