லிட்ரோ நிறுவனம் பொதுமக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்
Sri Lanka
Litro Gas
Sri Lankan Peoples
SL Protest
By Sumithiran
விநியோகம் நடைபெறமாட்டாது
மறுஅறிவித்தல் வரும் வரை உள்நாட்டு எல்பி எரிவாயு (12.5 கிலோ, 5 கிலோ மற்றும் 2.3 கிலோ) விநியோகம் நடைபெறமாட்டாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
"எம்மிடம் தற்போதைய இருப்புகள் அனைத்தும் முடிந்துவிட்டன, மறு அறிவித்தல் வரும் வரை வரிசையில் காத்திருக்க வேண்டாம் என்று நாங்கள் மக்களை கேட்டுக்கொள்கிறோம்" என்று மூத்த லிட்ரோ நிறுவன அதிகாரி கூறினார்.
விரைவில் இறக்குமதி
"நாங்கள் விரைவில் இறக்குமதியை எதிர்பார்க்கிறோம், மேலும் சில நாட்களில் விநியோகத்தை மீண்டும் தொடங்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
நாட்டின் பல பகுதிகளில் இன்றும் எரிவாயு கோரி மக்கள் போராட்டங்களை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்