இராஜாங்க அமைச்சருக்கு ஏற்பட்ட ஏமாற்றம்
மீண்டும் அமைச்சுப் பதவிக்கு வருவதற்கான நம்பிக்கை இல்லை என கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தெரிவித்துள்ளார்.
அரச தலைவரை சந்தித்ததன் பின்னர் தற்போதைய நிலவரங்கள் குறித்து அறிக்கை வெளியிடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பல்வேறு காரணங்களால் தாம் பெரும் ஏமாற்றமடைந்துள்ளதாகவும், இந்த விடயங்களை கருத்திற்கொண்டு தான் அமைச்சிலிருந்து தனது உடமைகளை கூட நீக்கியதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
கிராமிய வீதிகளை அமைப்பதற்காக இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் இருந்து அரச அமைச்சினால் பெறப்பட்ட 10 பில்லியன் ரூபாவை வழங்குவதற்கு அமைச்சின் செயலாளர் பேராசிரியர் ரஞ்சித் திஸாநாயக்க மறுத்தமை தொடர்பில் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா அதிருப்தி அடைந்துள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
100,000 கிராமிய வீதிகளை நிர்மாணிப்பதில் இருந்து நிமல் லான்சாவை நீக்கியமை அவரது விரக்திக்கு மற்றுமொரு காரணம் என அறியமுடிகிறது.
