இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணிவரை ஊரடங்கா? இராணுவத்தளபதி விளக்கம்
corona
sri lanka
people
By Shalini
ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பது தொடர்பில் அரசாங்கம் இதுவரையில் தீர்மானிக்கவில்லை என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இதவேளை, சமூக வலைத்தளங்களில் இன்று இரவு 11 மணி முதல் நாளை அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக செய்திகள் பரவி வருகின்றது.
அந்த தகவல் உண்மைக்கு புறம்பானது என இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.
அடையாளம் காணப்படும் பகுதிகள் முடக்கவும், மாகாண ரீதியிலான பயணத்தடைகள் மட்டுமே விதிக்கப்பட்டுள்ளன.
ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்படவில்லை, அது தொடர்பில் எந்த தீர்மானமும் முன்னெடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்