அரசியலில் இருந்து ஓய்வு என்ற பேச்சுக்கே இடமில்லை:மகிந்த
Mahinda Rajapaksa
Sri Lanka Politician
Sri Lanka Podujana Peramuna
By Sumithiran
தற்போதைக்கு அரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் இல்லை என சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மக்கள் பெருமளவில் பெரமுனவுடன் இணைந்துள்ளதாகத் தெரிவித்த அவர், சில மாற்றங்கள் ஏற்பட்டாலும் அடிமட்டத்தில் இருந்து மக்கள் நகரவில்லை என்றும் அவர் கூறினார்.
ஒவ்வொரு கட்சியும் பலத்தை காட்டவேண்டும்
பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாட்டில் அது நிரூபணமானது என்றும், ஒவ்வொரு கட்சியும் மாநாடுகளை நடத்த வேண்டும் என்றும், இது போன்ற செயல்களால் கட்சியின் பலத்தை காட்ட முடியும் என்றும் குறிப்பிட்டார்.
மக்களுக்கு இன்னும் நம்பிக்கை
பெரமுன மீது மக்களுக்கு இன்னும் நம்பிக்கை இருப்பதாகவும், எதிர்வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடும் தகுதி தனக்கு இல்லை எனவும், ஆனால் கட்சி யாரை தீர்மானித்தாலும் வெற்றிபெற பாடுபடுவேன் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 8 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி