அரசாங்கம் ஆணவத்தில் உள்ளது! மக்களை காப்பாற்றும் எண்ணம் இல்லை - ஐக்கிய மக்கள் சக்தி வெளியிட்ட தகவல்

Srilanka Sajith Premadasa Mano Ganesan Ameer Ali Rauff Hakeem
By Chanakyan Aug 18, 2021 05:48 AM GMT
Report

ஆணவம், அதிகாரத்தில் உள்ளமையால் உண்மையைப் புரிந்துகொள்ளாமை மற்றும் திறமையின்மை ஆகியவை இன்று அரசாங்கத்தின் மூன்று தூண்களாக மாறிவிட்டன. இந்த நேரத்தில் ஏற்படும் ஒவ்வொரு உயிர்ச்சேதத்திற்கும் அரசாங்கமே பொறுப்பு என ஐக்கிய மக்கள் சக்தி கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

கொரோனா தொற்று கட்டுப்படுத்த முடியாதளவில் பரவி வருகிறது. இந்த நேரத்தில் அரசாங்கம் தனது பொறுப்புகளையும் கடமைகளையும் புறக்கணிப்பது ஒரு சோகமான நிலையாகும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ, நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், மனோ கணேசன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான அமீர் அலி ஆகியோர் இந்த அறிக்கையினை வெளியிட்டுள்ளனர்.

மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டள்ள விடயம்,

உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) மற்றும் சர்வதேச மற்றும் தேசிய மருத்துவர்கள், இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து நாட்டை உடனடியாக அறிவியல் ரீதியாக முடக்குதலுக்கு உட்படுத்த வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆனால் இந்த அறிவுறுத்தல்களைக் பொருட்ப்படுத்தாமல் அரசாங்கம் தன்னிச்சையாக செயல்படுவதாகத் தெரிகிறது.

இந்த நேரத்தில், நியூசிலாந்து பிரதமர் டெல்டாவால் பாதிக்கப்பட்ட ஒருவரை அடையாளம் காணும் போது நாட்டை மூடி உடனடியாக நடவடிக்கை எடுப்பது ஒரு முன்னுதாரணம் அன்றி ஒரு இலட்சியமான செயற்பாடாகும்.

டெல்டா வைரஸின் மூன்று பிறழ்வுகள் இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சன்ன ஜயசுமண நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

அவசர காரணங்களுக்காக மட்டும் வீட்டை விட்டு வெளியேறுமாறு கொவிட் ஒழிப்பு செயலணியின் பிரதானி இராணுவத் தளபதியால் கூட கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஒருபுறம், அரசாங்கம் வைரஸின் பிறழ்வு விகாரங்கள் பரவுவதைப் பற்றி பேசுவதோடு மறுபுறம் மக்களை வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் வலியுறுத்துகிறது.

அவ்வாறே நாடு முடக்குதலை மேற்கொள்ளாது என்றும் கூறுகிறது. இந்த நான்கு காது கேளாத கதைகளின் அர்த்தம் என்ன? கொரோனா கட்டுப்படுத்தல் சார்ந்த விடயங்களை தனது அரசியல் நிகழ்ச்சி நிரலின்பால் தொடர்ச்சியாக முடிவுகளை எடுத்த அரசாங்கம், இன்று மக்களின் உயிர்களைக் கொன்று கொண்டே இருக்கிறது.

இந்தப் பிரச்சினையைத் தீர்க்க மக்களின் வாழ்க்கையை கடவுளிடம் ஒப்படைக்க அரசாங்கம் முன்மொழிகிறது. இதைக் கூறியது அரசாங்க அமைச்சரவையின் ஊடக பேச்சாளர்களில் ஒருவரே.

எனவே, இதை ஒரு எளிய அறிக்கையாக நிராகரித்து விட முடியாது. அரசாங்கத்தின் முந்தைய நடவடிக்கைகள் புராண சித்தாந்தத்தில் கொரோனா பரவல் நோயைக் குணப்படுத்த முயன்றது என்பது இரகசியமல்ல.

முட்டிகளை கீழே போடுதல், காளி பானம் மற்றும் ரிதிகல பானம் போன்ற திட்டங்களை செயல்படுத்த அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் யதார்த்தமான உதாரணங்களாகும்.வேறு வழியின்றியே சாதாரண மக்கள் உதவிக்காக கடவுளிடம் திரும்புகிறார்கள்.

அரசாங்க ஊடகப் பேச்சாளர் கடவுளிடம் மக்களை ஒப்படைப்பதன் கருத்தின் மூலம், இந்த தொற்றுநோயை கட்டுப்படுத்த அரசாங்கத்திடம் எந்தத் திட்டமும் இல்லை என்பதுவே தெளிவாகிறது.

நாட்டு மக்கள் தாமாகவே தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதுவே அரசாங்கத்தின் எண்ணமாக உள்ளது.

நாட்டின் பொருளாதாரம் சரிந்து விட்டதால், சர்வதேச அரங்கில் நம்பிக்கை முறிந்து விட்டதாலும் நாட்டை முடக்கி வைத்து விட்டு மக்களுக்கு ஆதரவளிக்க முடியாத அரசாங்கம் சிறுபிள்ளைத்தனமான முயற்சியை மேற்கொண்டுள்ளது.

நாடு முடக்கப்பட்டால் மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் பொருளாதார ஆற்றல் அரசாங்கத்திற்கு இல்லை என்று பாராளுமன்றத்தில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறிய அறிக்கையால் இது உறுதி செய்யப்படுகிறது.

அரசாங்கம் இப்போது என்ன செய்கிறது? பொது ஊழியர்களை வேலைக்கு அழைப்பது, பகுத்தறிவற்ற பயணக் கட்டுப்பாடுகள், ஊடக வெளியீடுகள் மற்றும் வர்த்தமானி அறிவிப்புகள் போன்ற அபத்தமான செயல்களில் ஈடுபட்ட வன்னம் நாட்டு மக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவித்துக்கொண்டிருக்கிறது.

நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நான்கு இலக்கங்களை எட்டும் போது தினசரி இறப்பு எண்ணிக்கை மூன்று இலக்கமாக உயரும் போது மனிதப்படுகொலையில் ஈடுபடுவதன் மூலம் கொரோனா தொற்றுநோயை கட்டுப்படுத்துவதற்காகவா நாடு மூடப்படாதுள்ளது என்று நாங்கள் அரசாங்கத்திடம் கேட்கிறோம்.

ஆணவம், அதிகாரத்தில் உள்ளமையால் உண்மையைப் புரிந்துகொள்ளாமை மற்றும் திறமையின்மை ஆகியவை இன்று அரசாங்கத்தின் மூன்று தூண்களாக மாறிவிட்டன. இந்த நேரத்தில் ஏற்படும் ஒவ்வொரு உயிர்ச்சேதத்திற்கும் அரசாங்கமே பொறுப்பு.

இந்த முக்கியமான நேரத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து அரசியல் கட்சிகளும் நாட்டு மக்களை மருத்துவ ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் பேரில் சுயமாக முடங்கிக் கொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றன.

குறைந்த பட்சம் தீர்மானமிக்க அடுத்த பத்து நாட்களுக்காவது அதன் செயல்பாட்டிற்கு பங்களிக்குமாறு வேண்டுகிறோம்.

ஏனென்றால், மக்களின் உயிரைக் காப்பாற்றுவதற்கான திட்டங்கள் அல்லது தேவைகள் அரசாங்கத்திடம் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது என்பதலாகும் என அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில், Stockholm, Sweden

30 Aug, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Villeneuve-Saint-Georges, France

20 Sep, 2024
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Toronto, Canada

14 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், துன்னாலை, வல்வெட்டி, துணுக்காய், கொழும்பு, வவுனியா

20 Sep, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
கண்ணீர் அஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

17 Sep, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

28 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Vaughan, Canada

19 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, Kokuvil, Scarborough, Canada

16 Sep, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மதவுவைத்தகுளம், பாவற்குளம், கரம்பைமடு

16 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025