யார் அதிபராக வந்தாலும் நீதிவேண்டி போராட்டம் தொடரும்..!
முல்லைத்தீவில் மகளிர் தினத்தினை முன்னிட்டும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் முன்னெடுத்துவரும் தொடர்போராட்டத்தின் 2209 ஆவது நாளினை முன்னிட்டும் முல்லைத்தீவு நகர சுற்றுவட்ட பாதையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது, இன்று(08) வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கங்களால் முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட வவுனியாமாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கதலைவி சி.ஜெனிதா,அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தலைவி தம்பிராசா செல்வராணி, மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தலைவி அமலராச் அமலநாயி ஆகியோர் அதிபர் தேர்தல் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
நீதிவேண்டிய போராட்டம்
இலங்கையில் யார் அதிபர் வந்தாலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிவேண்டிய போராட்டம் தொடரும் என்றும் இதுவரை நான்கு அதிபர்கள் இலங்கையினை ஆட்சிசெய்த காலம் தொடக்கம் நீதிக்கான போராட்டத்தில் தாம் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்கள்.
மகிந்த ராஜபக்ச போரினை நடத்தினார் இனத்தினை அழித்தார் எங்கள் உறவுகளை காணாமல் போக செய்தார் அதன்பின்னர் மைத்திரிபாலசிறிசேன வந்தார் அதன்பின்னர் கோட்டபாய ராஜபக்ச வந்தார் அதன் பின்னர் மக்களின் ஆணையினை பெறாத அதிபராக ரணில் விக்ரமசிங்க வந்தார் இலங்கையில் அடுத்தடுத்து அதிபர்கள் ஆட்சியாளர்களாக வருகின்றார்கள் ஆட்சிகள் மாறுகின்றன.
மகிந்த ராஜபக்ச போரினை நடத்தினார் இனத்தினை அழித்தார் எங்கள் உறவுகளை காணாமல் போக செய்தார் அதன்பின்னர் மைத்திரிபாலசிறிசேன வந்தார் அதன் பின்னர் கோட்டபாய ராஜபக்ச வந்தார் அதன் பின்னர் மக்களின் ஆணையினை பெறாத அதிபராக ரணில் விக்ரமசிங்க வந்தார்.
தமிழ்மக்களுக்கான தீர்வு
இலங்கையில் அடுத்தடுத்து அதிபர்கள் ஆட்சியாளர்களாக வருகின்றார்கள் ஆட்சிகள் மாறுகின்றன தமிழ்மக்களுக்கான எந்த தீர்வும் எட்டாத பொழுதும் ஆனால் அவர்களின் ஆட்சிகாலங்களில் பல சட்டங்களை கொண்டுவந்து தமிழ்மக்களை அடக்கிக்கொண்டிருக்கின்றார்கள். ஆனால் நாங்கள் பயங்கரவாதிகள் அல்ல உறவுகளுக்கான நீதியினை அடிப்படை உரிமையினை கோரித்தான் போராடிக்கொண்டிருக்கின்றோம்.
தற்போது அதிபர் தேர்தல் வரப்போவதாக சொல்லிக்கொண்டிருக்கின்றார்கள் எத்தனை அதிபர்கள் வந்தாலும் ஆட்சி மாறினாலும் தமிழர்களுக்கு எந்த ஒரு தீர்வும் கிடைக்கப்பெறாது என்பதை தமிழ்மக்கள் உணர்ந்திருக்கின்றார்கள் தமிழ்மக்கள் இனியும் உணர்ந்து ஒன்றிணைந்து போராட வேண்டும்.
அதிபர் தேர்தல் என்பது அவர்கள் தங்கள் ஆட்சிகளை பிடிப்பதற்காக இன்று ஓடிக்கொண்டிருக்கின்றார்கள் எந்த அதிபர் வந்தாலும் முகம்கள்தான் வேறு வருபவர்கள் எல்லாம் ஒரே இனத்தினை சேர்ந்தவர்கள் தமிழ் இனத்தினை ஒடுக்குகின்ற அழிக்கின்ற இனவாதிகள்தான் இலங்கையின் தலைவர்களாக வருகின்றார்கள்.
யார் வந்தாலும் எங்களுக்கு கவலையில்லை நாங்கள் சர்வதேசத்தினை நோக்கியே நீதிக்கான பயணம் தொடரும் என்று வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவிகள் தெரிவித்துள்ளார்கள்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |