வெடுக்குநாறிமலையில் பதற்றம்: கலகமடக்கும் காவல்துறை குவிப்பு
புதிய இணைப்பு
சிவராத்திரி தின நிகழ்வில் கலந்து கொண்டவர்களை வெளியேற்றும் முயற்சியாக கலகமடக்கும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் ஆலயத்தைசூழ சப்பாத்துகால்களுடன் நிற்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அத்துடன் சமையல் பாத்திரங்களும் காவல்துறையினரால் அவர்களது வாகனங்களில் ஏற்றப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்
மூன்றாம் இணைப்பு
பக்தர்களை விரட்டும் காவல்துறை
"வனவளத்திணைக்களம் மற்றும் தொல்லியல் சட்டத்தின்படி 6 மணிக்கு பின்னர் தொல்லியல் இடத்தில் பூசை வழிபாடுகளில் ஈடுபட முடியாது. எனவே ஆறு மணிக்கு பின்னர் வெடுக்குநாறிமலை ஆதிசிவன் கோவிலில் இருந்து அனைவரும் வெளியேற வேண்டுமென சிவராத்திரி நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு காவல்துறையினர் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.
எனினும் சிவராத்திரி தினம் என்பது இரவிரவாக நித்திரை முழிக்கும் ஒரு விரதம் எனவும் எனவே காலை வேளையே தாம் அங்கிருந்து வெளியேறுவோம் என பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.
அதனால் அப்பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இரண்டாம் இணைப்பு
சிவராத்திரி தின வழிபாட்டுக்காக வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயம் செல்ல நீண்ட இழுபறியின் பின் அனுமதி கிடைத்துள்ளது.
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் 300க்கும் மேற்பட்டோர் வெடுக்குநாறிமலை ஏறுகின்றனர்.
#சிவராத்திரி தின வழிபாட்டுக்காக #வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயம் செல்ல நீண்ட இழுபறியின் பின் அனுமதி!
— Worldwide Tamils (@senior_tamilan) March 8, 2024
எம்பிக்கள் @skajendren , @ImShritharan உடன் 300க்கும் மேற்பட்டோர் மலை ஏறுகின்றனர். #Vedukkunaarimalai #Shivratri #WWTnews #WorldwideTamils pic.twitter.com/Ejj5OZVPVd
வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. அதனால் சிவராத்திரி பண்டிகைக்கு தேவையான தண்ணீரை தமிழ் இளைஞர்கள் கிட்டத்தட்ட 10 கிலோமீட்டர் தூரம் சுமந்து செல்கிறார்கள்.
கைது செய்யப்பட்ட கோவில் பூசாரி மற்றும் மற்றவர்கள் விடுவிக்கப்படவில்லை.
முதலாம் இணைப்பு
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன், செல்வராசா கஜேந்திரன், மற்றும் வேலன் சுவாமிகள், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் ஆகியோர் வெடுக்குநாறிமலை சிவன் ஆலய சிவராத்திரி விழாவுக்கு வருகைதந்த நிலையில் காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினரால் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
நீதிமன்ற அனுமதியுடன் வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வர கோயிலில் சிவராத்திரி வழிபாடுகளுக்கு சென்றவர்களை- அனுமதியின்றி அரச வனத்துக்குள் நுழைந்தமை, காவல்துறையினரின் கட்டளையை மீறி வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் கீழ் நெடுங்கேணி காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.