அநுர ஆட்சியில் கேள்வியே படாத அந்த செய்தி: ரில்வின் பெருமிதம்
தற்போதைய அரசாங்கத்தின் கீழ் கடந்த ஆண்டில் எங்கும் பசி பற்றிய செய்திகள் இல்லை என்று ஜே.வி.பி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை செய்தித்தாள் ஒன்றுக்கு வழங்கி நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
திவாலான நாடு
அதன்போது மேலும் கருத்து வெளியிட்ட ரில்வின், "மக்களின் நெருப்பு அணைந்துவிட்டதாக நாங்கள் நினைக்கிறோம். திவாலான நாட்டை நாங்கள் கைப்பற்றினோம். சில இடங்களில், மக்களுக்கு உணவு இருக்கவில்லை, மக்கள் பாகற்காய் சாப்பிட்டு வாழ்வதாக செய்திகள் வந்தன.
ஆனால் இந்த அரசாங்கத்தின் ஆண்டில், எங்கும் பசி இருப்பதாக நாங்கள் கேள்விப்பட்டதில்லை.
பொருட்களின் விலைகளை நாங்கள் கட்டுப்படுத்தியுள்ளோம். அப்போது விலைகள் மிக அதிகமாக இருந்தன. தொழிலதிபர்களிடம் கேட்டால், சந்தையில் பொருட்களின் விற்பனை அதிகமாக இருப்பதாக எல்லோரும் கூறினார்கள்.
மக்களுக்கு நிவாரணம்
ஒரு வருடத்தில் பொருளாதாரத்தை உறுதிப்படுத்தியுள்ளோம். ஆனால் நாம் செல்ல வேண்டிய தூரம் அதிகம். ஆனால் இந்த குறுகிய காலத்தில் மக்களுக்கு எவ்வளவு நிவாரணம் அளித்துள்ளோம்?
விவசாயிகளுக்கு வழங்கப்படும் உர மானியம் 25,000 ஆக உயர்த்தப்பட்டது. ஜனவரி முதல் ஏழைக் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வாங்க ஆறாயிரம் வழங்கப்பட்டது.
மேலும், நிவாரணம் பெறுபவர்களின் நிவாரணம் அதிகரிக்கப்பட்டது. நிவாரண காலம் நீட்டிக்கப்பட்டது.
கடினமான பொருளாதாரம் இருந்தபோதும், அரசியலில் எங்கள் சலுகைகளை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்கினோம். அதைப் புரிந்து கொள்ள வேண்டும்." என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
