ஜனாதிபதி அநுரவுக்கு கஸ்ஸப தேரர் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை
பயங்கர யுத்தத்தை வெற்றிக் கொண்ட இராணுவ வீரர்களின் பிராண வாயுவை சுவாசிக்கும் எங்களை யாராலும் அச்சுறுத்த முடியாது என பலாங்கொடை கஸ்ஸப தேரர் தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை பௌத்த சம்மேளனத்தில் இன்று (12.02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அதன்போது, தொடர்ந்துரையாற்றி அவர், “ஜனாதிபதி என்பவர் இந்த நாட்டின் தற்காலிக பாதுகாவலர்.அவருக்கு தெரிய வேண்டும், இந்த சிங்கள பௌத்த இராச்சியத்தை எதிர்கால தலைமுறைக்கு பாதுகாத்து வழங்க வேண்டும் என. ஆனால் அரசியலமைப்பு சட்டத்தை மீறி பௌத்த பிக்குகள் தாக்கப்பட்டுள்ளனர்.
அநுர இந்திய ஒப்பந்தங்கள்
சிங்கள பௌத்த விரோத துரோகிகளான இந்த ஆட்சியாளர்களால் நாம் 29 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தோம்.
டில்வின் சில்வாவுக்கு இந்த கதை தெரியும்.தொலைபேசி அழைப்பொன்றை எடுத்த இதை இப்படி தீர்த்து கொள்வோம் என்றார்.ஆனால் நாங்கள் போராட்டத்தை காட்டிப் கொடுக்க வில்லை.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்தியாவுடன் ஏழு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளார். இந்தியாவின் துறைமுக நகரமொன்றை ஒன்றை அமைக்கவே ஜனாதிபதி அநுர முயற்சிக்கிறார்.
அமைச்சர் சுனில் வட்டகல, கடிதத் தலைப்பொன்றை எடுத்து கொண்டு ஜனாதிபதி செயலகத்துக்கு வருமாறு குறிப்பிட்டார்.ஏனென்றால் இந்த காணியை இந்தியாவுக்கு வழங்கி அதில் ஹோட்டல் ஒன்றை அமைக்கவே திட்டமிட்டுள்ளனர்” என குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |