வெற்றிடமாகவுள்ள சபாநாயகரின் பதவி!
சிறிலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்திலிருந்து விலகி சுயாதீனமாய் செயற்பட உள்ளதாக அறிவித்தமையை அடுத்து கடந்த 5 ஆம் திகதி முன்னாள் பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தன் பதவி விலகலை அறிவித்த போதிலும் அரச தலைவரினால் அது ஏற்றுக் கொள்ளப்படாமையால் இச் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் சுதந்திரக் கட்சி அரச தலைவருடன் நடாத்திய பேச்சு வார்த்தையின் பிரகாரம் மீண்டும் அவர் பொறுப்பேற்று கொண்ட போதிலும் நடாளுமன்றில் உரையாற்றிய போது ஏப்ரல் 30 ஆம் திகதி வரையுமே தான் இப் பதவியை வகிக்க உள்ளதாக அறிவித்திருந்தார்.
குறித்த காலம் தற்போது நிறைவடைந்ததை அடுத்து இப் பதவி வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.
இப் பதவிக்காக பரிந்துரைக்கப்பட்ட சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் தற்போது ஊடகங்கள் ஊடாக வெளியிடப்படுகின்றன.
இவ் விடயம் தொடர்பில் கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல நாளை நடைபெற உள்ள நாடாளுமன்ற கூட்டத்தில் இப் பதவிக்காக தமது தரப்பில் ஒருவரின் பெயர் வழங்கபடும் என குறிப்பிட்டார்.
இந்நிலையில், புதிய பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதாயின் முன்னாள் பிரதி சபாநாயகரின் பதவி விலகலை அரச தலைவர் ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவின் பதவி விலகல் ஏற்றுக் கொள்ளப்பட்டமை தொடர்பில் இதுவரை நாடாளுமன்றுக்கு அறிவிக்கபடவில்லை எனவும் நரேந்திர பெர்னாண்டோ .குறிப்பிட்டார்.
