பண்டிகைக் காலங்களில் தடையில்லா மின்சாரம்!
                                    
                    Sinhala and Tamil New Year
                
                                                
                    Sri Lanka
                
                                                
                    Sri Lankan Peoples
                
                        
        
            
                
                By Laksi
            
            
                
                
            
        
    ரமழான் பண்டிகை மற்றும் சிங்கள, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் நாட்களில் பராமரிப்பு பணிகளுக்காக மேற்கொள்ளப்படும் மின் துண்டிப்புகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
பண்டிகைக்காலத்தில் எவ்வித இடையூறுமின்றி மின்சாரத்தை விநியோகிப்பதற்கு அவசியமான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் சுலக்சன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
எரிபொருள் கையிருப்பு
இதனை முன்னிட்டு பொதுமக்களுக்கு தேவையான எரிபொருளை அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் போதுமான எரிபொருள் கையிருப்பு நாட்டில் காணப்படுவதாக, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் சுலக்சன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  | 
    
                                
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்