அரச தலைவர் மாளிகை உட்பட 191 இடங்களில் மின்தடை இல்லை!
people
Parliament
Presidential Palace
Power Cut
Public Utilities Commission
By Chanakyan
நாட்டில் தற்போது 10 மணிநேரத்துக்கு மேல் மின்நடைமுறையில் இருக்கும் நிலையில், அரச தலைவர் மாளிகை மற்றும் நாடாளுமன்றிற்கு தொடர்ச்சியாக மின்சாரம் விநியோகிக்கப்பட உள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும் சுதந்திர வர்த்தக வலயங்கள், மின்சார நிலையங்களை அண்மித்த பிரதேசங்கள் கைத்தொழில் பேட்டைகள் உள்ளிட்ட நாட்டின் 191 முக்கிய இடங்களுக்கான மின்விநியோகம் துண்டிக்கப்படாது என்றும் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் இந்த 191 இடங்களுக்கு மின்சாரத் தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மின்சாரக் கட்டணம் செலுத்தாத வாடிக்கையாளர்களின் மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி