விசேட மருத்துவர்கள் இல்லை -சிறுவர்களின் உயிருக்கு பேராபத்து
காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் உள்ள சிறுவர்களின் இதய வடிகுழாய் பிரிவிற்கு விசேட வைத்தியர் இல்லாத காரணத்தினால் நோயாளர்களான சிறுவர்கள் பரிசோதனைகளுக்காக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு மாற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலைமையினால் குறித்த நேரத்தில் இந்த பரிசோதனைகளை மேற்கொள்ளாததால் நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இரண்டு விசேட மருத்துவர்களும் இல்லை

இது தொடர்பில் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில்,
சிறுவர் இருதய வடிகுழாய் சிகிச்சைப் பிரிவில் இருந்த இரு வைத்தியர்களில் ஒருவர் நாட்டை விட்டு வெளிநாடு சென்றுள்ள நிலையில் மற்றைய வைத்தியர் தற்போது பயிற்சிக்காக சென்றுள்ளார்.
கராப்பிட்டி போதனா வைத்தியசாலையின்

இந்நிலையை கட்டுப்படுத்த கராப்பிட்டி போதனா வைத்தியசாலையின் சிறுவர் இருதய வடிகுழாய் பிரிவிற்கு வைத்தியர் ஒருவரை நியமிக்குமாறு நோயாளர்களின் பெற்றோர்கள் உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.