அரச இலட்சினையற்ற நாடாளுமன்ற 50 வாகனங்கள்...! வெளியான அறிக்கை

Sri Lanka Parliament Sri Lanka Government Of Sri Lanka
By Shalini Balachandran Jul 30, 2026 08:09 AM GMT
Report

இலங்கை நாடாளுமன்றத்திற்குச் சொந்தமான 50 வாகனங்களில் அரச இலட்சினை பொருத்தப்பட்டிருக்கவில்லை எனத் தேசிய தணிக்கை அலுவலகம் தெரிவித்துள்ளது.

அரசுக்குச் சொந்தமான அனைத்து ஒதுக்கப்பட்ட வாகனங்களிலும் அரச இலட்சினை பொறிக்கப்பட வேண்டும் என்ற விதிமுறை உள்ளபோதிலும் இவ்வாறு காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கைப் நாடாளுமன்றத்தின் 2025 ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ள தணிக்கை அறிக்கையிலேயே இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

உச்சம் தொட்ட தங்க விலை...! வாங்கவுள்ளோருக்கு வெளியான தகவல்

உச்சம் தொட்ட தங்க விலை...! வாங்கவுள்ளோருக்கு வெளியான தகவல்

நுகர்வுப் பரிசோதனை

அத்துடன், நாடாளுமன்றத்தின் 41 வாகனங்களுக்கான எரிபொருள் நுகர்வுப் பரிசோதனை (Fuel Efficiency Test) சுற்றுநிருப விதிகளுக்கு அமைய மேற்கொள்ளப்படவில்லை என்றும் தணிக்கை அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

அரச இலட்சினையற்ற நாடாளுமன்ற 50 வாகனங்கள்...! வெளியான அறிக்கை | No State Emblem On 50 Parliament Vehicles

2016 டிசம்பர் 29 ஆம் திகதியிட்ட பொது நிர்வாகச் சுற்றுநிருபத்தின்படி, ஒவ்வொரு எரிபொருள் பரிசோதனைக்குப் பின்னரும் 12 மாதங்கள் கழித்து அல்லது 25,000 கிலோமீட்டர் தூரம் பயணித்த பிறகு அல்லது எஞ்சின் தொடர்பான முக்கிய பழுதுபார்ப்புக்குப் பிறகு எது முதலில் வருகிறதோ, அதன் பிறகு மீண்டும் எரிபொருள் நுகர்வுப் பரிசோதனை செய்யப்பட வேண்டும்.

ஆனால் இப்பரிசோதனைகள் முறையாக நடத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விகாராதிபதி பதவிப் போட்டி...! தேரர் ஒருவர் மீது கொடூரத் தாக்குதல் - மற்றுமொருவர் கைது

விகாராதிபதி பதவிப் போட்டி...! தேரர் ஒருவர் மீது கொடூரத் தாக்குதல் - மற்றுமொருவர் கைது

தீவிர சேவைக்காலம்

நாடாளுமன்றத்திற்குச் சொந்தமான 12 வாகனங்களை ஏலத்தில் விற்பனை செய்வதற்கு 5 அதிகாரிகள் கொண்ட குழுவினால் கடந்த ஆண்டின் மே 28 ஆம் திகதி தீர்மானிக்கப்பட்ட போதிலும், இன்றுவரை அந்த நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரச இலட்சினையற்ற நாடாளுமன்ற 50 வாகனங்கள்...! வெளியான அறிக்கை | No State Emblem On 50 Parliament Vehicles

அத்தோடு நாடாளுமன்ற ஊழியர்களுக்குச் சலுகை அடிப்படையில் மோட்டார் வாகன அனுமதிப்பத்திரம் (Duty-free Vehicle Permits) வழங்குவது தொடர்பான சுற்றுநிருப அறிவுறுத்தல்களுக்கு முரணாகச் செயற்படப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரேஷ்ட நிர்வாகப் பதவியொன்றில் 6 ஆண்டுகள் தீவிர சேவைக்காலத்தைப் பூர்த்தி செய்யாத மூன்று நாடாளுமன்ற அதிகாரிகளுக்குச் சலுகை வாகன அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ள போதிலும், அதற்கான முறைப்படியான அனுமதி தொடர்பான ஆவணங்கள் தணிக்கைப் பிரிவிடம் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் அவ்வறிக்கை மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

கோட்டாபயவின் முன்னாள் செயலாளருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

கோட்டாபயவின் முன்னாள் செயலாளருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

YOU MAY LIKE THIS


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026