ராஜபக்சாக்கள் தொடர்பில் மைத்திரி எடுத்துள்ள முடிவு
அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்படுமாயின் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவளிக்கத் தயார் என கட்சியின் செயலாளர் நாயகம் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட வேலைத்திட்டத்தின் கீழ் சர்வகட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டு முன்னோக்கிச் சென்றால், அந்த வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிக்க கட்சி என்ற ரீதியில் நாங்கள் தயாராக உள்ளோம் என்றார்.
அமைச்சுப்பதவியை பெற தயாரில்லை
அதுமட்டுமல்லாமல் தனி நபராக அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பதவிகளைப் பெறவோ அல்லது சலுகைகளைப் பெறவோ தாம் தயாரில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
சர்வகட்சி அரசாங்கத்திற்காக தியாகங்களைச் செய்யத் தயார் என கட்சியின் தலைவர் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், சிறிலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ராஜபக்சவின் நிலைப்பாடுகளுக்கு ஆதரவளிக்க ஒரு கட்சி என்ற ரீதியில் தாம் தயாராக இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


புத்திர சோகத்தில் ஈழ அன்னையர்கள்... இன்று அன்னையர் தினம்… 2 மணி நேரம் முன்
