கின்னஸ் சாதனையைாக மாறிய நோபல் பரிசு : அமைச்சரால் ஏற்பட்ட குழப்பம்
இலங்கை தேயிலைக்கு சர்வதேச ரீதியாக கிடைக்கப்பெற்ற அங்கீகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்ட போது அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி நோபல் பரிசு கிடைக்கப்பெற்றதாக குறிப்பிட்டிருந்தார்.
உலகில் அதிகூடிய விலைக்கு விற்பனை செய்யப்பட்ட தேயிலை இலங்கை தேயிலை என அவர் தெரிவித்திருந்தார்.
கின்னஸ் உலக சாதனை சான்றிதழ்
இது தொடர்பிலான கின்னஸ் உலக சாதனை சான்றிதழ் இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ளது என அவர் குறிப்பிட்டு இருந்தார்.
அவர் இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டபோது நோபல் பரிசு என தவறுதலாக கூறியதாக அவரது அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.
இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பிரத்தியேக வகையான தேயிலை ஒன்று வரலாற்று சாதனை அளவு விலைக்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது.
ஜப்பானில் நடைபெற்ற வர்த்தகக் கண்காட்சி மற்றும் ஏல விற்பனையில் இவ்வாறு கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது.
அமைச்சரின் தடுமாற்றத்தால் எழும் விமர்சனம்
இலங்கைக்கு நோபல் பரிசு கிடைக்கப்பெற்றது என வெளியிட்ட கருத்து பொது வெளியில் பல்வேறு விமர்சனங்களை உருவாக்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
பல்வேறு அரசியல்வாதிகள் அமைச்சரின் இந்த கருத்துக்கு கடும் விமர்சனங்களை வெளியிட்டிருந்தனர்.
அண்மைக்காலமாக அமைச்சர் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வருவதுடன் அமைச்சர் நோபல் பரிசு குறித்து வெளியிட்ட கருத்தும் சமூக ஊகடங்களில் பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
