NPP அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை இன்று
பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான விசாரணையை நீதி மற்றும் நம்பிக்கையுடன் முன்னெடுப்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா பிரேரணை இன்று சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் கையளிக்கப்படவுள்ளது.
அமைச்சருக்கு எதிராக அவநம்பிக்கை
அருண ஜெயசேகர பாதுகாப்பு பிரதி அமைச்சராக செயல்படுவது, ஏப்ரல் 21 தாக்குதல்கள் குறித்து நடத்தப்படும் விசாரணைகளுக்கு இடையூறாக இருப்பதாக தெரிவித்து, இந்த நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படுகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்கக் கோவையின் 6 ஆவது பிரிவில், உறுப்பினர்கள் அனைத்து சந்தர்ப்பங்களிலும் தம்மீது ஒப்படைக்கப்பட்டுள்ள பகிரங்க நம்பிக்கைக்கு இணங்கி செயலாற்றுதல் முக்கியம் என கூறப்பட்டுள்ளது.
அத்துடன், 9ஆவது பிரிவில் கூறப்பட்டுள்ள, மனசாட்சிப்படி நடத்தல், மக்களின் நம்பிக்கை மற்றும் மதிப்பை சிறக்கும் வகையில் செயற்படல் என்பன மீறப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால்,
பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிராக அவநம்பிக்கை பிரேரணையைக் கொண்டுவர தீர்மானித்துள்ளதாக எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னதாக தெரிவித்திருந்தனர்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் திருவிழா


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 2 நாட்கள் முன்
