வடகொரிய அதிபரின் உத்தரவு :கொரிய தீபகற்பத்தில் கடும் பதற்றம்
போருக்கான தயார்நிலையில் இருக்குமாறு வடகொரிய அரச தலைவர் கிம் ஜாங் அன் தனது இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளமை கொரிய தீபகற்பத்தில் கடும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அண்மைக்காலமாக கடற்பகுதியில் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்திவருகிறது. இவ்வாறு ஏவுகணை சோதனை நடத்தி போர்பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
கப்பல் கட்டும் தளத்தில் ஆய்வு
இந்த பதற்றத்துக்கு மத்தியில் கிம் ஜாங் அன் நம்போவில் உள்ள கப்பல் கட்டும் தளத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு சென்ற அவர் அங்குள்ள இராணுவ வீரர்களிடையே உரையாற்றும்போது,
போருக்கான ஏற்பாடுகளை முடுக்கி விடுமாறு
நாட்டின் கடல்சார் இறையாண்மையை பாதுகாப்பதிலும், போர் தயாரிப்புகளை முடுக்கி விடுவதிலும் கடற்படை முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே போருக்கான ஏற்பாடுகளை முடுக்கி விடுமாறு இராணுவத்துக்கு அழைப்பு விடுத்தார்.
அவரின் இந்த அறிவிப்பு கொரிய தீபகற்ப பகுதியில் மீண்டும் போர்ப்பதற்றத்தை அதிகரித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |