வடக்கு - கிழக்கு ஆளும் கட்சி எம்பிக்கள் பொம்மைகள் :சத்தியலிங்கம் குற்றச்சாட்டு

Vavuniya Local government Election ITAK Pathmanathan Sathiyalingam
By Sumithiran Mar 09, 2025 08:52 PM GMT
Report

வடக்கு - கிழக்கு மாகாணத்தில் ஆளும் கட்சி உறுப்பினர்களாக வந்த எங்களது நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய தேவைகளை கூட எங்களுக்கூடாக நிறைவேற்ற வேண்டிய கட்டத்தில் உள்ளார்கள். அவர்கள் அங்கு கூலியாட்கள் போல் தான் இருக்கிறார்கள். அவர்கள் பொம்மைகள் போல தான் உள்ளார்கள் என இலங்கை தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

வவுனியா, குருமன்காடு, காளிகோவில் வீதியில் நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தை இன்று (09.03) திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு - கிழக்கில் உள்ளூராட்சி சபைகளை கைப்பற்றவேண்டும்

வவுனியா மாவட்டம் மட்டுமன்றி வடக்கு - கிழக்கில் பெரும்பாலான உள்ளூராட்சி சபைகளை எமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். இந்த தேர்தல் முறை என்பது சிக்கலான முறை. நாங்கள் வடக்கு மாகாணத்தில் கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் புதுக்குடியிருப்பு, பூநகரி ஆகிய பிரதேச சபைகளை மாத்திரமே ஒரு கட்சியாக அந்த நேரம் தமிழ் தேசியக் கூட்டமைப்பாக ஆட்சி செய்தோம்.

வடக்கு - கிழக்கு ஆளும் கட்சி எம்பிக்கள் பொம்மைகள் :சத்தியலிங்கம் குற்றச்சாட்டு | North East Ruling Party Mps Are Puppets

வவுனியாவில் எல்லா சபைகளிலும் பெரும்பான்மையான வட்டாரங்களை கைப்பற்றி இருந்தாலும் கூட நாங்கள் எதிர்கட்சியாகவே இருக்க வேண்டி இருந்தது. அதற்கு இந்த உள்ளூராட்சி தேர்தல் முறைமை காரணம். அதனால் தான் கடந்த உள்ளூராட்சி மன்றத்திற்குரிய வேட்புமனுக்கள் செய்த போது கட்சிக்குள் முடிவெடுத்தோம். தனித் தனிக் கட்சியாக போட்டியிட்டு ஒன்று சேர்ந்து ஆட்சி அமைப்போம் என்று.ஆனால் அதன் பின் நடந்த முடிவு உங்களுக்கு தெரியும்.

அரசியலில் இருந்து விலக மறுக்கும் சமல் ராஜபக்ச :உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட முடிவு

அரசியலில் இருந்து விலக மறுக்கும் சமல் ராஜபக்ச :உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட முடிவு

 வடக்கு,கிழக்கில் தேசிய மக்கள் சக்தியும் களத்தில்

இம்முறை எமக்கு சவாலான உள்ளூராட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அதிக வாக்குளைப் பெற்று தனிப் பெரும் கட்சியாக ஆட்சி அமைத்துள்ள ஜனாதிபதியின் கட்சி வடக்கு - கிழக்கில் போட்டியிட வற்துள்ளார்கள். கடந்த உள்ளூராட்சி தேர்தலில் அவர்கள் வடக்கு - கிழக்கில் போட்டியிடவில்லை.

வடக்கு - கிழக்கு ஆளும் கட்சி எம்பிக்கள் பொம்மைகள் :சத்தியலிங்கம் குற்றச்சாட்டு | North East Ruling Party Mps Are Puppets

எனவே, எமது வேட்பாளர்களின் செயற்பாடுகள் அதில் தாக்கம் செலுத்தும். அரசியல் ரீதியாக கொள்கை, ரீதயாக வேறுபாடுகள் இருந்தாலும் கூட ஒவ்வொரு வட்டாரத்திலும் போட்டியிடும் வேட்பாளர் தான் கட்சியின் வெற்றியை தீர்மானிக்கப் போகின்றார். இதனால் நாம் பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளோம்.

வவுனியா மாவட்டம் மிகவும் சவாலுக்கு உட்படுத்தப்பட்ட ஒரு மாவட்டம். எமது மாவட்டத்தில் இனப் பரம்பலை மாற்றக் கூடிய வகையில் பல பிரச்சனைகள இடம்பெறுகின்றன. எங்களது மக்களது காணிகள் அபகரிக்கப்படுகிறது. பல திணைக்களங்கள் எமது காணிகளை கையகப்படுத்துகிறது. எமது இடம்பெயர்ந்த மக்கள் குடியேற முடியாத நிலை இருகிறது.

அநுர கட்சியின் கொழும்பு மேயருக்கான வேட்பாளர் அறிவிப்பு

அநுர கட்சியின் கொழும்பு மேயருக்கான வேட்பாளர் அறிவிப்பு

வன்னிக்காக நாடாளுமன்றில் குரல் கொடுக்கும் இருவர்

வன்னி தேர்தல் மாவட்டத்திலும் இருப்பை காப்பாற்ற வேண்டிய நிலையில் இருந்து வருகின்றோம். அந்த வகையில் நாடாளுமன்றத்திலும் நானும், ரவிகரனும் குரல் கொடுத்து வருகின்றோம். அமைச்சர்களோடு பழகி வருகின்றோம். எமது மக்கள் சார்ந்த செயற்பாடுகளுக்காக அவர்களுடன் சண்டை பிடிக்கவில்லை. தவறுகளை கூறுகின்றோம். பல வாக்குறுதிகளை தந்துள்ளார்கள். சில நிறைவேற்றப்பட்டுள்ளன.

வடக்கு - கிழக்கு ஆளும் கட்சி எம்பிக்கள் பொம்மைகள் :சத்தியலிங்கம் குற்றச்சாட்டு | North East Ruling Party Mps Are Puppets

ஆனால், வடக்கு - கிழக்கு மாகாணத்தில் ஆளும் கட்சி உறுப்பினர்களாக வந்த எங்களது நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய தேவைகளை கூட எங்களுக்கூடாக நிறைவேற்ற வேண்டிய கட்டத்தில் உள்ளார்கள். அது ஒரு பரிதாபமான விடயம். அவர்களுக்கான குரல் அங்கு ஒலிப்பதற்கு இடமில்லை. அவர்கள் அங்கு கூலியாள் போல் தான் இருக்கிறார்கள். வடக்கு - கிழக்கு ஆளும் கட்சிநாடாளுமன்ற உறுப்பினர்கள் பொம்மைகள் போல தான் உள்ளார்கள். அது தான் ஜதார்த்தம்.

கொழும்பில் போட்டியிடவில்லை - பின்வாங்கியது தமிழரசுக்கட்சி : சுமந்திரன் அறிவிப்பு

கொழும்பில் போட்டியிடவில்லை - பின்வாங்கியது தமிழரசுக்கட்சி : சுமந்திரன் அறிவிப்பு

அண்மையில் கருத்து வெளியிட்ட ஊடகம் ஒன்று தரைப்பட்டியில் வடக்கு கிழக்கு ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கீழ் மட்டத்தில் இருக்கிறார்கள் எனக் காட்டியது. எவ்வாறு இருந்தாலும் எமக்கு சவால் மிக்கது இந்த தேர்தல். அதை மனதில் வைத்து செயற்பட வேண்டும் எனத் தெரிவித்தார். 


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

01 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாழ், இருபாலை, Markham, Canada

12 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, பரிஸ், France

13 Mar, 2006
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
நன்றி நவிலல்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025